நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பஞ்சரே ஆகாது... சூப்பர் டயருக்காக வீடியோ வெளியிட்ட சியாட்... விளம்பரத்துல இருக்கவர் யாருனு தெரியுதா?..

பஞ்சரே ஆகாத டயருக்காக புதிய வீடியோவை சியாட் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இவ்வீடியோ மற்றும் டயர் பற்றிய சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த நிலையிலேயே தனது 'பஞ்சர் சேஃப்' திறன் கொண்ட டயர்களைப் பிரபலப்படுத்தும் விதமாக புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பர வீடியோவில் பிரபல திரைப்பட நடிகரான ரானா டகுபதி இடம் பெற்றிருக்கின்றார் என்பது அதன் தனிச்சிறப்பாகும்.
இதுமட்டுமின்றி, பிரத்யேகமாக பஞ்சராக டயர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இவ்வீடியோவின் காட்சிகள் இடம் பெற்றிருப்பதும் கூடுதல் சிறப்பான தகவலாக இருக்கின்றது. மிக சமீபத்திலேயே இந்நிறுவனம் ரானா டகுபதியை தனது பிராண்டின் அம்பாசிடராக நியமித்தது.
இந்த நிலையிலேயே இவரை வைத்து புதிய விளம்பர வீடியோவை தயாரித்து வெளியிட்டிருக்கின்றது சியாட். தென்னிந்தியாவின் ஐந்து முக்கிய மாநிலங்களைக் கவரும் வகையில் இவ்விளம்பரம் சின்னத் திரைகளில் திரையிடப்பட இருக்கின்றது. அதாவது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இந்த விளம்பர வீடியோ பிரத்யேகமாக எடுக்கப்பட்டிருக்கின்றது.
தொடர்ந்து, இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின்போது இவ்விளம்பரம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த வீடியோவில் ஆணியால் ஒன்னுமே செய்ய முடியாது என்பதை விளக்கும் வகையில் ரானா டகுபதி நடித்திருப்பார். குறிப்பாக, ஆணிகள் நிறைந்த சாலையில் இருசக்கர வாகனத்தை அவர் ஓட்டி வருவதைப் போன்று இடம்பெற்றிருக்கும் காட்சியே விளம்பரத்தின் முக்கிய அங்கமாகும்.
ஏனெனில், இருசக்கர வாகனங்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் அந்த டயர்கள், ஆணிகளால் குத்தப்பட்டாலும், அவற்றால் ஏற்படும் துளையை தானாகவே அடைத்து கொள்ளும் வசதியைப் பெற்றிருக்கின்றது. இந்த திறனை புதிய சியாட் டயர்கள் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே இதனை விளம்பரப்படுத்தும் புதிய வீடியோவை சியாட் வெளியிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்