நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பசுவின் பாலா? எருமையின் பாலா? உங்களுக்கு எது சிறந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

 எருமை பாலில் கொலஸ்ட்ராலின் அளவானது பசும்பாலின் அளவினை விட குறைவாக உள்ளது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் பி12 (கோபாலமைன்) இதய நோய்கள் வராமல் நம்மைப் பாதுகாக்கிறது.


அசைவ உணவை கூட மனிதன் சாப்பிடாமல் தன் வாழ்க்கையில் இருந்திருப்பான் ஆனால் பாலை குடிக்காமல் ஒரு நாளும் இருந்திருக்கமாட்டான். அந்த அளவிற்கு பால் பலருக்கும் பிடித்த, அவசியமான ஒரு உணவுப்பொருள். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளை 6 மாதத்திற்கு பிறகு பசும்பாலை குடிக்க தாய்மார்கள் பழக்குவர் . தாய் பால் இல்லாத குழந்தைகளுக்கு பிறந்தது முதல் பசும் பாலை கொடுக்க தொடங்குவர். தாய்ப்பாலுக்கு அடுத்தது ஒவ்வொருவரும் பருகத் தொடங்கியது பசும் பாலை தான். பால் என்பது கால்சியம் மற்றும் வைட்டமின் Dயின் ஆதாரமாகும். பாலில் பல வகைகள் இருந்தாலும் பசும்பால் மற்றும் எருமை பாலுக்கான வித்தியாசத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இந்த பதிவில் அதனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பாலில் உள்ள சத்துக்கள் :

எருமை பாலில் புரதத்தின் அளவு அதிகமாக உள்ளது. கொழுப்பு சத்தும் எருமை பாலில் அதிகமாக உள்ளதால், கலோரி அளவும் அதிகரித்தே காணப்படுகிறது. பசுவின் பாலில் நீர் அதிகம் இருக்கும். பசும்பால் 90% நீர்தன்மையுடன் இருக்கும். எருமை பாலில் கால்சியம், பாஸ்போரோஸ் , மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது.


கலர் மற்றும் கொழுப்பு:

எருமை பால் வெள்ளை நிறத்தில் இருக்கும். மேலும் இது கிரீமி மற்றும் அடர்த்தியான நிலைத்தன்மையைக் கொண்டிருக்கும். வைட்டமின் A ஆக மாற்றப்படும் பீட்டா கரோட்டின் இந்த பாலில் இருப்பதால், பாலை பார்ப்பதற்கு பளிச்சென்று தெரியும். பசுவின் பால் மஞ்சள்-வெள்ளை நிறத்தில் இருக்கும். பசுவின் பாலை விட எருமை பால் திக்காகவும், க்ரீமியாகவும் இருப்பதற்கான காரணம், அதில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் தான். எருமைப்பாலில் 7-8 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. அதுவே பசுவின் பாலில் 3-4 சதவிகித கொழுப்பு உள்ளது.

எந்த பால் விரைவில் கெடாது? எதனை குடிக்கலாம்?

பசுவின் பாலை 1 அல்லது 2 நாட்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் எருமை பாலை நீண்ட நாட்கள் கெடாமல் பயன்படுத்த முடியும். எருமை பாலோ, பசுவின் பாலோ, எதுவாக இருந்தாலும் அதனை நமது விருப்பத்திற்கு ஏற்ப அருந்தலாம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பாக்கெட் பாலுக்கு பதில் கறந்த மாட்டு பாலை வாங்கி பயன்படுத்துவதால், அதன் முழு சுவை மற்றும் நற்பலன்களை நாம் அனுபவிக்க முடியும். இதனால் பால் விற்பனையாளர்களும் பயனடைவர்.

உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுவது பால். உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. அதிக பட்சம் நமக்கு தெரிந்ததெல்லாம் ஆவின் பால் , ஆரோக்கியா பால் மற்றும் கவின்ஸ் பால் தான். ஆவின் பாலின் வருகைக்கு முன்பு, எல்லோர் வீடுகளிலும் பசும் பால் மற்றும் எருமை பால் தான் இருக்கும்.

இதயத்திற்கு நலத்தை தரும் எருமை பால்:

எருமை பாலில் கொலஸ்ட்ராலின் அளவானது பசும்பாலின் அளவினை விட குறைவாக உள்ளது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் பி12 (கோபாலமைன்) இதய நோய்கள் வராமல் நம்மைப் பாதுகாக்கிறது. இதய சிக்கல் இருப்பவர்கள் இந்த எருமை பாலை சாப்பிட்டு வருவது நல்லது. உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி ஒருமுறை ஆலோசித்துவிட்டு பருகுவது நல்லது.

என்னதான் பாலை பற்றி நாம் பெருமை பேசினாலும் அதிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சிலருக்கு எருமைப்பால் ஆகாது ஒரு சிலருக்கு பசும்பால் ஆகாது. யாருக்கு எந்த பால் குடிக்க வேண்டும் என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு பிறகு முடிவெடுப்பது முக்கியம். ஏனெனில் ஒவ்வொருவரின் உடல்நிலை வேறுபடும் உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற பாலை அருந்துவது மிகவும் முக்கியம். இல்லை என்றால் சிக்கல் ஏற்பட்டு உங்கள் நிலையை மோசமாக்கிவிடும்.


also read :  வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!