நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர் சிஇஓக்கள் அமெரிக்க காங்கிரசில் ஆஜர்?

கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர் சிஇஓக்கள் அமெரிக்க காங்கிரசில் ஆஜர்?

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், டுவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சி ஆகியோர் அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை முன் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சையும் அவர்களுடன் ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என சொல்லப்படுகிறது.

ஆனால் எந்த காரணத்திற்காக இவர்கள் பிரதிநிதிகள் சபையில் ஆஜராக உள்ளனர் என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.

இந்த 3 பேரும் கடந்த அக்டோபரில் செனட்டின் வர்த்தக நிலைக்குழுவின் முன்பு ஆஜராகினர்.

அப்போது இந்த நிறுவனத்தின் உள்ளடக்க மாற்றங்கள் குறித்து குடியரசு கட்சி எம்பிக்களும், அதிபர் தேர்தல் குறித்த தவறான தகவல்களை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனநாயக கட்சி எம்பிக்களும் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்