நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எல்லையில் மீண்டும்.. படைகளை குவிக்கும் சீனா.

லடாக் எல்லையில் மீண்டும் சீனா படைகளை குவித்து வருகிறது. ஏவுகணைகள், ராக்கெட், விமான எதிர்ப்பு பீரங்கிகளை குவித்துள்ளதோடு, எல்லையில் நீண்ட காலம் மோதலை தொடரும் நோக்கில் படைகளை நகர்த்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

லடாக் எல்லையில் சீனா படைகளின் அத்துமீறலை அடுத்து கடந்த 8 மாதங்களுக்கு மேலாக அங்கு பதற்றம் நிலவுகிறது. எல்லை பதற்றத்தை தணிக்க இருதரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், படைகளை விலக்கிக் கொள்ள சீன முன்வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் லடாக் எல்லையில் சீனா மீண்டும் படைகளை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிதாக படைகளை குவிப்பதோடு, இருக்கும் படைகளின் நிலைகளை மாற்றி அமைப்பதோடு, புதிய, புதிய ஆயுதங்களை குவிக்கும் பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளது. லாடக் எல்லைக்கு அருகில் உள்ள பாங்யாங் சோ பகுதியில் எல்லையில் சாய் தள தற்காலிக சுற்றுச்சுவரையும் சீன ராணுவம் அமைத்துள்ளது.

லடாக்கின் சிமூர் எல்லையில் இருந்து 82 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீன ராணுவத்தின் சின்கியூவான்கி முகாமில் புதிதாக 35 கன ரக ராணுவ வாகனங்கள், 155 மி.மீ விட்டம் கொண்ட சுடு குழல் தாங்கிய 4 பீரங்கிகள், 83 தானியங்கி இலகு ரக பீரங்கிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

எல்லையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரூடோக் கண்காணிப்பு மையத்தில் புதிதாக கட்டுமானத்தை முன்னெடுத்துள்ள சீனா ராணுவம்,கூடுதல் வாகனங்களையும், ஆயுதங்களையும் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாங்யாங் சோ ஏரியின் வடக்கு கரையில் உள்ள பிங்கர் போர், பிங்கர் செவன் பிராந்தியத்தில் சீனா படைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, சாய்தள தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எல்லையில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீனாவின் பியூ ரேடார் மையத்தில் புதிதாக 20 ராணுவ வாகனங்களில் வீரர்கள் வந்திறங்கி உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

இந்திய ராணுவம் வலிமையாக முகாமிட்டு கைலாஷ் மலை தொடருக்கு அருகில் உள்ள மால்டோ கேரிசன், சாசூல் பிராந்தியங்களில் சீனா, படைகளை களம் இறங்கி உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையில் இருந்து 228 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீனாவின் லாசா படை முகாமில் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அந்த முகாமிற்கு 30 வாகனங்களில் ஆயுத தளவாடங்களை சீனா கொண்டு வந்ததை இந்திய ராணுவம் கண்டறிந்துள்ளது.

இந்திய விமானப்படையின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் திபேத்தை ஒட்டி உள்ள படை முகாம்களில் எல்லாம் விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஏவுகணைகளை சீன ராணுவம் கொண்டு வந்துள்ளது.

இதே போல இந்தியா, சீனா, பூடான் நாடுகளில் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீன ராணுவத்தின் ருபின்கா ராணுவ படை தளத்தில் புதிதாக 5 தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், ஒரே நேரத்தில் பல ராக்கெட்டுகளை ஏவும் கருவிகளை அங்கு சீன கொண்டு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கைகள், நீண்ட காலத்திற்கு எல்லை மோதலை நீட்டிக்க உதவும் முன்னேற்பாடுகள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்