நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிலேயே முதல் முறையாக கார்பன் நியூட்ரல் ஆயில் வாங்கிய ரிலையன்ஸ்..!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உலகிலேயே முதல் முறையாக (first consignment) 'கார்பன் நியூட்ரல் ஆயிலை' (carbon-neutral oil) அமெரிக்காவில் இருந்து வாங்கியுள்ளது.
இதன் மூலம் 2035ஆம் ஆண்டுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜீரோ கார்பன் நிறுவனமாக மாற நிர்ணயம் செய்துள்ள இலக்கை வெற்றிகரமாக அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம்நகரில் வைத்துள்ளது. இந்தச் சுத்திகரிப்பு ஆலையில் வருடத்திற்கு 68.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்-ஐ சுத்திகரிப்பு செய்யும் அளவிற்குத் திறன் கொண்டுள்ளது.

இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து ரிலையன்ஸ் பெர்மியன் பேசின் தளத்தில் இருந்து சுமார் 2 மில்லியன் டன் கார்பன் நியூட்ரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதியைச் செய்துள்ளது. அமெரிக்காவின் Oxy Low Carbon Ventures (OLCV) இந்தக் கார்பன் நியூட்ரல் கச்சா எண்ணெய்யை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்ய உள்ளது.

உலகம் முழுவதும் இருக்கும் முன்னணி நிறுவனங்களும், அரசுகளும், வர்த்தகத் தலைவர்களும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் 2035ஆம் ஆண்டுக்குள் ஜீரோ கார்பன் நிறுவனமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், கார்பன் நியூட்ரல் ஆயில் இறக்குமதி இத்திட்டத்தின் முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!