இந்த சம்பவம் குறித்து பேசிய கால்நடை மருத்துவர், பூனை மயக்கம் அடைந்தது போன்ற நிகழ்வுகள் பாம்பு கடித்தலின் பொதுவான அறிகுறியாகும், ஆனால் செல்லப்பிராணி உரிமையாளர் இதுகுறித்து தெரிந்திருக்கவில்லை என்றார்.
இரண்டு குழந்தைகளை பாதுகாப்பதற்காக விஷ பாம்பை எதிர்த்து போராடி உயிரிழந்த பூனை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குயின்ஸ்லாந்தில் ஆர்தர் என்ற பூனை ஒன்று தனது உரிமையாளரின் இரு குழந்தைகளுடன் வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது, அங்கு ஒரு ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த பழுப்பு நிற விஷ பாம்பு பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அந்த பூனை சற்றும் யோசிக்காமல் குழந்தைகளை பாதுகாக்க அதனுடன் சண்டை போட்டுள்ளது. குழந்தைகளை காப்பாற்றும் பணியில், ஆர்தரை அந்த பாம்பு கடித்தது. இதனால் ஆர்தர் மயங்கியுள்ளது. ஆனாலும் சற்று நேரத்திற்கு பின்னர் எழுந்து இயல்பாக இருந்துள்ளது. இதனால் அதன் உரிமையாளர்கள் பாம்பு கடித்தை கவனிக்கவில்லை.
மறுநாள் காலையில் ஆர்தர் மீண்டும் மயங்கி விழுந்துள்ளது, இந்த முறை அதனால் எழுந்திருக்க முடியவில்லை. இதனை கவனித்த அதன் உரிமையாளர் தனாவாவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அந்த பூனையை கொண்டு சென்றுள்ளார். ஆனால் பாம்பு கடித்து ஒரு நாள் கடந்து விட்டதால் ஆர்தர் அபாயகட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மீட்க முடியாத அளவுக்கு விஷம் கடுமையாக பரவியதால் ஆர்தர் உயிரிழந்தது. இதனால் அதன் உரிமையாளர் குடும்பம் மிகுந்து சோகத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து பேசிய அதன் உரிமையாளர், ஆர்தர் என்றும் எங்கள் நினைவில் இருக்கும், எங்கள் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியதற்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக நாங்கள் இருப்போம் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய கால்நடை மருத்துவர், பூனை மயக்கம் அடைந்தது போன்ற நிகழ்வுகள் பாம்பு கடித்தலின் பொதுவான அறிகுறியாகும், ஆனால் செல்லப்பிராணி உரிமையாளர் இதுகுறித்து தெரிந்திருக்கவில்லை என்றார். மேலும் ஆர்தர் எப்போதும் குறும்பு தனமாக இருக்கும், இதற்கு முன்னர் விபத்தில் சிக்கி அடிபட்டதால் இங்கு ஒரு முறை வந்துள்ளது , அப்போதிலிருந்து எங்கள் மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் ஆர்தர் மீது பிரியம் உள்ளது என தெரிவித்தார். இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் சிலர் ஷேர் செய்துள்ள நிலையில், தற்போது ஆர்தர் வைரலாகி வருகிறது. மேலும் ஆர்தர் "நான்கு கால் ஹீரோ" என்று புகழப்படுகிறது.
Comments
Post a Comment