நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காரசாரமான பச்சை மிளகாய் தேநீர்... பெங்களூரு சாய்ஃபி கஃபேயில் குவியும் மக்கள்!

இந்த தேநீர் காரத்தை விரும்புவர்களுக்கு ஏற்றது, இது நிச்சயமாக உங்கள் சுவை மொட்டுகளை ஆச்சரியப்படுத்தும். குறிப்பாக இந்த குளிர் காலத்தை இந்த தேனீரை ருசிக்க ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர்.

நீங்கள் ஒரு தேநீர் பிரியரா? புதிய தேநீர் சுவைகளை ருசிக்க ஆர்வமிக்க நபராக இருந்தால் பெங்களூரின் சாய்ஃபி கஃபே (Bengaluru’s Chaiffee Cafe) கடைக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

இந்த கபேவின் முக்கிய சிறப்பம்சம் பச்சை மிளகாய் தேநீர் தான். தற்போது சமூக வலைதளத்தில் இந்த தேநீர் தான் ட்ரெண்டிங். இந்த தனித்துவமான தேநீரை வழக்கமான முறையில் தேநீர் தயாரித்து அதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து தயாரிக்கின்றனர். அதாவது, ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை எடுத்து கொண்ட அதனுடன் தேயிலை இலைகள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு காய்ச்சுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. அந்த கலவை வடிகட்டி தான் தருவார்கள் என்பதால் மிளகாய் துண்டுகளை எப்படி கடிப்பது? என்பது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த தேநீர் காரத்தை விரும்புவர்களுக்கு ஏற்றது, இது நிச்சயமாக உங்கள் சுவை மொட்டுகளை ஆச்சரியப்படுத்தும். குறிப்பாக இந்த குளிர் காலத்தை இந்த தேநீரை ருசிக்க ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். மேலும் இது குளிர்காலத்தில் மோசமான தொண்டையை குணப்படுத்த சிறந்த பானம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த கபேயில் மிளகாய் தேநீர் மட்டுமின்றி, உலகெங்கிலும் தயாரிக்கப்படும் பிற வகை தேநீர்களான புதினா தேநீர், காஷ்மீரி கஹ்வா, இஞ்சி மற்றும் மசாலா தேநீர் போன்ற பிற வகை தேநீர்களும் கிடைக்கிறது.

தேநீர் பிரியர்களுக்கு மட்டுமின்றி காபி பிரியர்களுக்கான வழக்கமான காபி, கோல்டு காபி மற்றும் பிளாக் காபி போன்றவையும் கிடைக்கிறது. மேலும், நீங்கள் மில்க் ஷேக் அருந்த விரும்பினால், தாமரை பிஸ்கட் மற்றும் ஸ்னிகர்களில் மூலம் தயாரிக்கப்பட்ட மில்க் ஷேக்குகள் என பல்வேறு வெரைட்டி மில்க் ஷேக்ஸ் இங்கு கிடைக்கிறது. சாய்ஃபி கஃபேயில் புதுமையான சிற்றுண்டிகளும் உள்ளது. தென்னிந்திய உணவுக்கான உங்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு இட்லியை நீங்கள் ஆர்டர் செய்யலாம். அதுவும் பீட்ரூட், மஞ்சள், புதினா மற்றும்
கொத்தமல்லி என பல்வேறு சுவைகளில் இட்லிகள் கிடைக்கிறது.

இவை மெரூன், பச்சை, மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணங்களின் வண்ணமயமாக ஆசையை தூண்டும் வகையில் சுவையான, காரசாரமான சட்னிகளுடன் கிடக்கிறது. அதுமட்டுமின்றி செர்ரி மற்றும் வெண்ணெய் சேர்த்து பஞ்சு போன்று தயாரித்த சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெரி பிளேவர் பன்கேக் கிடைக்கிறது.

இங்கே சுவையான சாக்லேட் பானி பூரி உள்ளது. டியூட்டி ப்ரூட்டி, சாக்லேட் மற்றும் கற்கண்டு சென்று தயாரித்த முறுமுறுப்பான சாக்லேட் சுவையான பூரிஸில் கொடுக்கின்றனர். குறிப்பாக இந்த சாக்லேட் பானி பூரி ஒரு அழகான ஃபெர்ரிஸ் சக்கரத்தில் வழங்கப்படுகிறது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இங்கு செல்வது ஒரு நல்ல அனுபவத்தை தரும். மேலும் குறைந்த விலையில் வழங்கப்படும் ஏராளமான புதுமையான உணவுகளை ஆர்டர் செய்யலாம்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்