நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Netflix -ஐ இலவசமாக பயன்படுத்த சூப்பரான ஐடியா - ஜியோ முதல் வோடாஃபோன் Vi வரை பெஸ்ட் பிளான்கள்!

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் விஐ உள்ளிட்ட நிறுவனங்களின் ரீச்சார்ஜ் பிளான்களை சரியாக தேர்தெடுப்பது மூலம் நெட்பிளிக்ஸ் வீடியோக்களை இலவசமாக காணலாம்.
Netflix -ஐ இலவசமாக பயன்படுத்த சூப்பரான ஐடியா - ஜியோ முதல் வோடாஃபோன் Vi வரை பெஸ்ட் பிளான்கள்!

முன்னணி ஆன்லைன் வீடியோ தளமான நெட்பிளிக்ஸ், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகிறது. 199 ரூபாய் நெட்பிளிக்ஸ் பேக்கை ரீச்சார்ஜ் செய்தால், ஒருமாதம் அந்த தளத்தில் வரும் வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்கலாம். இலவசமாக கண்டுகளிக்க நினைப்பவர்களுக்கு மற்றொரு சூப்பரான ஐடியாவும் இருக்கிறது. ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் விஐ உள்ளிட்ட நிறுவனங்களின் ரீச்சார்ஜ் பிளான்களை சரியாக தேர்தெடுப்பது மூலம் நெட்பிளிக்ஸ் வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் (Jio Postpaid Plus)

ஜியோவின் போஸ்ட் பெய்ட் பிளான் 399 ரூபாயில் தொடங்கி 1, 499 ரூபாய் வரை இருக்கிறது. 399 ரூபாய் ஃபிளானில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ், 75 ஜிபி டேட்டா ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம். 599 ரூபாய் பிளானில் 100 ஜபி டேட்டாவுடன், கூடுதலாக ஜியோ குழும சலுகைகள் வழங்கப்படுகிறது. 799 ரூபாய் பிளானில் 150 ஜிபி டேட்டாவும், 899 ரூபாய் பிளானில் 200 ஜபி டேட்டாவும், அதனுடன் ஜியோ குழும சலுகைகள் வழங்கப்படுகின்றன. 1499 ரூபாய் போஸ்ட் பெய்ட் ஃப்ளானில் 300 ஜிபி டேட்டாவுடன், 500 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வசதி, அன்லிமிட்டெட் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் வசதிகள் கொடுக்கப்படுகின்றன. கூடுதலாக நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்சன்கள் வழக்கப்படுகின்றன.

ஜியோ பைபர்

ஜியோ பைபர் திட்டத்தில் ஆன்லைன் பல்வேறு வீடியோ தளங்களுக்கான சலுகைகள் வழங்கப்படுகின்றன. 1499 ரூபாய் திட்டத்தில், நெட்பிளிக்ஸ் வீடியோ தளத்துக்காக 499 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 2,499 ரூபாய் திட்டத்தில் 649 ரூபாய் நெட்பிளிக்ஸ் சேவைக்காக ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம். இதேபோல், 3,999 மற்றும் 8,499 ரூபாய் திட்டங்களில் நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்டு மற்றும் நெட்பிளிக்ஸ் பிரீமியம் சப்ஸ்கிரிப்சன்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றன

வோடாஃபோன் - ஐடியா

தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடாஃபோன் ஐடியா, நெட்பிளிக்ஸ் இலவச சப்ஸ்கிரிப்சனை வழங்குகிறது. விஐபி போஸ்ட் பெய்ட் திட்டம் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் மாதம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 50 பைசாவும், இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 3 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் அன்லிமிட்டெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏர்போர்ட் முனையங்களில் உள்ள ஓய்வறைகளில் இலவசமாக தங்கிக்கொள்ளும் சலுகைகளையும் வழங்குகிறது. போஸ்ட்பெய் பிளஸ் 1099 ரூபாய் திட்டம் ZEE5 பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோவுக்கு ஒரு வருட இலவச சந்தாவை வழங்குகிறது.

நெட்பிளிக்ஸ் அடிப்படையில் நான்கு விதமான ரீச்சார்ஜ் பிளான்களை வைத்துள்ளது. ஒரே ஒரு திரைக்கான SD ரெசல்யூசன்ஸ் திட்டத்தில் மாதம் 199 ரூபாயும், ஆண்டுக்கு 2,388 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மற்றொரு எஸ்.டி திட்டத்தில் மாதம் 499 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 5,988 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இரண்டு திரைக்கான FHD ரெசல்யூசன் திட்டம் மாதம் 649 ரூபாய்க்கும், ஆண்டுக்கு 7,788 ரூபாய்க்கும் கொடுக்கப்படுகிறது. 4 திரைக்களுக்கான UHD ரெசல்யூசன் திட்டம் மாதம் 799 ரூபாய்க்கும், ஆண்டுக்கு 9, 588 ரூபாய்க்கும் கொடுக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ரீச்சார்ஜ் திட்டத்தை தெளிவாக பார்த்து ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!