நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

what's app ல் ஒரு மெசேஜ் ... சொந்த ஊரிலேயே வேலை கிடைக்கும்.. அற்புதமான திட்டம்......

வாட்ஸ்அப்பில் "ஹாய்" என்ற குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம், தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் தங்கள் திறமைகளுக்கு ஏற்ற வேலைகளைக் கண்டறியகூடிய செயற்கை-நுண்ணறிவு சார்ந்த சாட்போட்(chatbot ), மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப தகவல் முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (TIFAC) ஷ்ராமிக் சக்தி மன்ச்(Shramik Shakti Manch) (SAKSHAM) என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இது தொழிலாளர்களை அவர்களின் சொந்த இடங்களில் உள்ள வாட்ஸ்அப் வழியாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இணைக்கும்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டப்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அவர்களில் பலர் உணவு ஆதாரங்கள் கூட இல்லாமல் இருந்ததாக TIFAC நிர்வாக இயக்குநர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த போர்டல் இந்தியா முழுவதும் உள்ள MSME-களின் புவியியல் வரைபடத்தை உள்ளடக்கியது. இது தங்கள் பகுதிகளிலேயே வேலைகள் கிடைப்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான திறன்கள் பற்றிய தரவை அளிக்கிறது. இதற்காக 7208635370 என்ற செல்போன் எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு தொழிலாளி வாட்ஸ்அப் சாட்டில் ஒரு செய்தியை அனுப்பியதும், அது அந்த நபர் மற்றும் அவர்களின் பணி அனுபவம் பற்றிய தகவல்களைத் தேடும் பின்தொடர்தல் கேள்விகளைக் கேட்கும். பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பயனரை அருகிலுள்ள வேலை வழங்கும் நிறுவனத்துடன் இணைப்பை ஏற்படுத்தும்.

தற்போது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே செயல்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தை மற்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்துவதில் TIFAC செயலாற்றி வருகிறது. மேலும், ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் 022-67380800 என்ற எண்ணில் அழைக்கலாம் எனவும் அந்த கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் வேலை தேடும் இளைஞர்கள், நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் தவிர்க்கப்படும், அதிக பயணம் தவிக்கப்படும் என கருதப்படுகிறது. இந்த வாய்ப்பின் மூலம் எந்த வேலையும் பெறமுடியும். உதாரணத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள், பிளம்பர்ஸ், மின் தொழிலாளர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்