நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்க துணை சுகாதாரத்துறை அமைச்சராக திருநங்கை நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி பைடன் அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி  பைடன் அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு  திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது. இந்த நியமனத்துக்கு குடியரசு கட்சியினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்த நிலையில், மசோதா செனட் சபையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.ரேச்சல் லெவின் 52-க்கு 48 என்ற ஆதரவு வாக்குகள் வித்தியாசத்தில் முதல் துணை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் செனட்டால் அங்கீகரிக்கப்பட்ட முதல் வெளிப்படையான திருநங்கை தனிநபராகவும், மிக உயர்ந்த தரத்தில் முதல் திருநங்கை பெடரல் அதிகாரியாகவும் திகழ்கிறார்.லெவின் முன்னர் பென்சில்வேனியாவின் சுகாதார செயலாளராக இருந்தார். அவர் மாநில மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். கடந்த வாரம் செனட், கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் சேவியர் பெக்கெராவை புதிய சுகாதார செயலாளராக உறுதிப்படுத்தியது. இவர் இந்த துறைக்கு தலைமை பொறுப்பேற்கும் முதல் லத்தீன் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!