நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா பரவலை தடுக்க வாக்குச்சாவடி மையங்களில் 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் - சுகாதாரத்துறை நடவடிக்கை

கொரோனா பரவலை தடுக்க 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கப்பட உள்ளன.
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு அன்று கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. இதற்கான உபகரணங்களை, தமிழக சுகாதாரத்துறை கொள்முதல் செய்து வருகிறது.

அதன்படி வெப்ப நிலையை பரிசோதிக்கும் ‘தெர்மல் ஸ்கேனர் கருவி’, முழு உடற்கவச உடை, 3 அடுக்கு முககவசம், காட்டன் முககவசம், 2 வகையான கையுறை, 3 வகையான கிருமிநாசினி, முக பாதுகாப்பு கவசம், மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பெட்டகம் உள்பட 13 வகையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கப்பட உள்ளன. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வதுடன், கிருமிநாசினி கொண்டு கை சுத்தம் செய்தப்பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். முககவசம் அணியாமல் வரும் வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடியில் முககவசம் வழங்கப்படும். வாக்குச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜென்டுகளுக்கு, கையுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வாக்குச்சாவடிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். வாக்காளர்களும் பாதுகாப்புடன் வாக்களிக்கலாம்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!