நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலையில் வெந்தயம்… என்ன பயன்கள்? எப்படி சாப்பிடுவது?

கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேவையான அளவு தேன் கலந்தால் உடனே ரெடியாகிவிடுகிறது இந்த வெந்தய டீ.
இந்திய சமையலறைகளில் அதிகம் காணப்படும் ஒரு உணவுப்பொருள் வெந்தயம். காரசாரமான உணவு வகைகள் முதல் பராத்தாக்கள் வரையில் கணிசமாக நாம் அதனை பயன்படுத்தி வருகின்றோம். நீரிழிவு நோய், செரிமான கோளாறு போன்றவற்றை கட்டுக்குள் வைப்பதுடன் எலும்புகளையும் வலுப்பெற செய்கிறது.

ஆனால் எப்போது வெந்தயத்தை உட்கொள்வது என்பதில் கொஞ்சம் குழப்பம் தான். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதன் சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் உணவுகளில் கணிசமாக அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். International Journal For Vitamin and Nutrition Research என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் தினமும் காலையில் ஊறவைத்த 10 கிராம் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் அது இரண்டாம் நிலை நீரிழிவை கட்டுக்குள் வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஊறவைத்த தண்ணீரை தினமும் குடித்தால் அது ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

எப்படி வெந்தயத்தை எடுத்துக் கொள்வது?

கொதிக்கின்ற நீரில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போடவும். 10 நிமிடங்கள் அந்த நீரில் அது ஊறியவுடன், வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டிய நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேவையான அளவு தேன் கலந்தால் உடனே ரெடியாகிவிடுகிறது இந்த வெந்தய டீ.

வெந்தயத்தில் இருக்கும் நார்சத்து உடலில் கொழுப்பை குறைக்க உதவும். கோலோன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது. மலச்சிக்கல், வயிற்று பிரச்சனை, நெஞ்செரிச்சல் ஆகியவற்றையும் சரி செய்கிறது.

வெந்தயத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கிறது.

வெந்தயத்தை துணியில் சுற்றி, உடல் வலி, தசை வலி ஆகியவற்றிற்கு ஒத்தடம் கொடுத்தால் அவையும் விரைவில் குணம் அடையும் என்று ரிங்கி குமாரி கூறியுள்ளார். ஃபோர்டிஸ் மருத்துவமனையில் தலைமை உணவு ஆலோசகராக பணியாற்றி வருகிறார் இவர்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!