நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எல்லை மீறும் சீனா? பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்... 'மேட் இன் சீனா' ரகசிய கேமராக்கள் கண்டெடுப்பு

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தான் மேல் சபையில் வாக்கெடுப்பு நடைபெறும் இடத்திற்கு அருகில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரகசிய கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் நமக்கும் பெரும்பாலான நேரங்களில் சுமுகமான உறவு இருந்ததில்லை. இந்தியா எல்லையில் பயங்கரவாதிகளை அனுப்புவது, துப்பாக்கிச் சூடு எனப் பாகிஸ்தான் அத்துமீறிக்கொண்டே இருக்கும்.

அதேநேரம் பாகிஸ்தானுக்கும் அதன் மற்றொரு அண்டை நாடான சீனாவுக்கும் நல்ல உறவு உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ளது.
பாகிஸ்தான் மேல்சபை

ஆனால், தற்போது பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் மேல்சபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 48 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று பதிவு ஏற்றுக்கொண்டனர். அப்போது மேல் சபையின் சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது.
சபாநாயகர் தேர்தல்

இதில் பிரதமர் இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சாதிக் சஞ்சிராணி என்பவரை சபாநாயகர் பதவிக்கு முன்னிறுத்தியது. அவருக்கு எதிராக முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானியை எதிர்க்கட்சிகள் சபாநாயகர் பதவிக்குக் களமிறக்கியது. இது தொடர்பாக வாக்குப்பதிவு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு உறுப்பினராகச் சென்று தங்கள் வாக்குகளை அளித்து வந்தனர்.
ரகசிய கேமராக்கள்

அப்போது, சில எம்பிகள் வாக்களிக்கும் இடத்திற்கு அருகில் சீன ரகசிய கேமராக்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால், இம்ரான் கான் தலைமையிலான ஆளும் கட்சியினர், ரகசிய கேமராக்களுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள்தான் இந்த கேமராக்களை வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.

மேட் இன் சீனா

இதையடுத்து மதியம் வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் இம்ரான் கான் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட சாதிக் சஞ்சிராணி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அந்த கேமராக்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பதால் அதில், மேட் இன் சீனா என்று இருந்தாலும், அங்கு பொருத்தப்பட்ட கேமராக்களுக்கும் சீனாவுக்கும்
எவ்வித தொடர்பும் இல்லை என்றே தெரிகிறது. இதுவரை சீனா தரப்பில் இதற்கு எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்