நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

2030-ல் ஏற்படப்போகும் பேராபத்து - நாசா எச்சரிக்கை

சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் ஏற்படும் மாற்றம், கடல் நீர் மட்டம் உயர்வால் அமெரிக்காவின் கடற்கரையோரப் பகுதிகள் அதிகப்படியான வெள்ளபெருக்கால் பாதிக்கப்படும் என நாசா எச்சரித்துள்ளது.
காலநிலை மாற்றம் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இது குறித்து விண்வெளி ஆய்வு மையமான நாசா கூர்ந்து கவனித்து வருகிறது. அமெரிக்க கடற்கரையோர நீர் மட்டம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்ட நாசா ஆய்வாளர்கள், அதனை வெளியிட்டுள்ளனர். அதில், 2030 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கடற்கரையோர பகுதிகள் கடுமையான வெள்ளப்பெருக்கை சந்திக்கும் என எச்சரித்துள்ளனர். இதற்கு முன் இல்லாத வகையில் கடற்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இதற்கு சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் ஏற்படும் மாற்றமும் காரணமாக இருக்கும் என கூறியுள்ளனர்.

தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தள்ளாட்டம் இருப்பதை கண்டுபிடித்துள்ள நாசா விஞ்ஞானிகள், இதனால் பூமி மீதான சந்திரனின் ஈர்ப்பு விசை அதிகரிக்கும் எனக் கூறியுள்ளனர். இந்த ஈர்ப்பு விசை அதிகரிக்கும்போது கடலில் அலைகளின் வேகமும், உயருமும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடற்கரையோர பகுதிகளில் கரைகள் அரிப்பு ஏற்பட்டு கடல்நீர் உட்புகும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றனர். வரும் காலங்களில் இந்த தன்மை மேலும் அதிகரித்து, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக, அமெரிக்க கடற்கரையோர பகுதிகளில் கடல் நீரின் மட்டம் அதிகரித்து, நீர் உட்புகுவதும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். 2019 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா, அட்லாண்டிக் மற்றும் வளைகுடா பகுதிகளில் இருக்கும் கடற்கரையோரங்களில் 600 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. இந்த வெள்ளப் பெருக்கிற்கு முக்கிய காரணமாக அதிக அலைகள் மற்றும் அலைகளின் உயரம் அதிகரிப்பு ஆகியவை என கூறப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கடல் அலைகளின் உயரமும், ஆக்ரோஷமும் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், கடல்அரிப்பும் அதிகரிப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இதுவே வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். தற்போது சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் ஏற்பட்டுள்ள தள்ளாட்டமும் கால நிலை மாற்றத்துக்கான வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதால், உலக நாடுகள் கடற்கரையோர பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக நாசாவின் கடல் மட்ட உயர்வை கண்காணித்து வரும் குழு, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வணேடும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் முன்வைத்துள்ளனர். இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய ஆய்வாளர் பில் தாம்சன் பேசும்போது, அலைகளின் வேகம் அதிகரிப்பு புயல்களை உருவாக்குவதில்லை என விளக்கமளித்துள்ளார். ஆனால், அலைகளின் வேகம் அதிகரிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தால், புயல்கள் உருவாவதில் அதன் பங்களிப்பும் இருக்கும் என கூறியுள்ளார். நாசா ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் கிளைமேட் சேஞ்ச் இதழில் வெளியாகியுள்ளது.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!