நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க்

இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு எலான் மஸ்க் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன், 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளித் துறையில் பல்வேறு அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக விண்ணுக்கு மனிதர்களைஅனுப்பும் திட்டத்தை இஸ்ரோசெயல்படுத்தி வருகிறது. 'ககன்யான்' என பெயரிடப்பட்டுள்ள இந்ததிட்டம், ரூ.10 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்படும் 2022-ம்ஆண்டு இறுதியில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ககன்யான் விண்கலத்தில் 3 வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். இதற்கானமுன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விண்வெளியில் தாழ்வான நிலையிலிருந்து பூமியை 7 நாட்கள் சுற்றிவரும் வகையில் ககன்யான் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உபகரணங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து வழங்கி வருகிறது. இதற்காக டிஆர்டிஓ-வுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த சூழலில் இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட உள்ள திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் இன்ஜின் சோதனை 3-வது முறையாகமேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை திட்டமிட்ட நேரத்துக்குள் வெற்றிகரமாக நிறைவேறியது. 

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் இன்ஜின் சோதனை, திருநெல்வேலியில் உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 240 விநாடிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் ஒரு வார்த்தையில் “வாழ்த்துக்கள்” என்று இந்திய கொடியுடன் பதிவிட்டுள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் வருகிற 2026ஆம் ஆண்டுக்குள் மனிதனை தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!