Guinness Record: இப்படியும் ஒரு கின்னஸ் சாதனையா? நீங்களே பாருங்கள் - வீடியோ!
- Get link
- X
- Other Apps
ஒரே நேரத்தில் 16 பவுலிங் பாலை தூக்கி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.
வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என விரும்புபவர்கள் ஏராளமானோர் உண்டு, தங்களது முயற்சியை வெற்றிகரமாக செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்கள் ஏராளம். ஒருமுறை நழுவ விட்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்து கின்னஸ் சாதனை படைத்தவர்களும் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற இலக்கில் உறுதியாக இருப்பார்கள்.
சாதனை படைக்க வயது தடை இல்லை என்பதால், தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் சாதனை புத்தகத்தில் இடம்பெறலாம். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கு நீங்கள் இதுதான் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் இல்லை. உங்கள் முயற்சி புதுமையாகவும், இதுவரை யாரும் முயற்சிக்காத ஒன்றை அல்லது யாரேனும் செய்த ஒன்றை முறியடிக்கும் வகையில் இருந்தால் போதும்.
அந்தவகையில், வித்தியாசமான ஒரு சாதனையை ஒருவர் படைத்துள்ளார். இதெல்லாம் ஒரு சாதனையா? என வீடியோ பார்க்கும்போது உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இதுவரை யாரும் முயற்சிக்காத ஒன்றை செய்ததற்காக கின்னஸ் அவருடைய சாதனையை அங்கீகரித்துள்ளது. அவர் செய்த சாதனை என்னவென்றால், 16 பவுலிங் பாலை ஒரே நேரத்தில் சுமக்கிறார். பவுலிங் பால் வெயிட் சாதாரணமாக 2.7 கிலோவில் இருந்து 7 கிலோ வரை உள்ளது.
அவர் பெயர் சாட் (Chad). 16 பவுலிங் பால்களை தூக்கும் அவருக்கு ஒருவர் உதவி செய்கிறார். ஆனால், அவர் தூக்கிய பவுலிங் பால்களின் வெயிட் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் அவர் சாதனையை கின்னஸ் அங்கீகரித்து சாட்டுக்கு சான்றிதழ் கொடுத்துள்ளது. கின்னஸ் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவருடைய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 3 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் அடித்துள்ளனர்.வித்தியாசமான சாதனை முயற்சி என்றாலும், 16 பவுலிங்குகளை அவர் தூக்கியிருப்பது வியக்க வைக்கிறது என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். ஒரு பவுலிங் பால் கால்மேல் விழுந்தால் கூட வலியை பொறுத்துக்கொள்ள முடியாது, அவர் என்னவென்றால் 16 பாலை அசால்டாக வைத்திருக்கிறார்!
உண்மையில் பாராட்ட வேண்டிய சாதனை என மற்றொருவர் பாராட்டியுள்ளார். வழக்கம்போல சில நெட்டிசன்கள் நெகடிவ் கமெண்டுகளையும் பதிவிட்டுள்ளனர். இதெல்லாம் ஒரு சாதனையா? என வேடிக்கையாக கேட்டுள்ளனர். அதே வீடியோவின் கடைசியில் ஒருவர் பவுலிங் பாலை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிறார். சுமார் 11 பால்களை அடுக்கிய பிறகு, 12 வது பால் வைக்கும்போது அனைத்து பால்களும் சரிந்து விழுகின்றன. அவரின் முயற்சியையும் கின்னஸ் குழுவினர் பாராட்டியுள்ளனர்.
ALSO READ :
கேமராவில் சிக்கிய அரியவகை கிளாஸ் ஆக்டோபஸ்..வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்....
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment