கைதியானால், ‘இந்த’ சிறைச்சாலைகளில் கைதியாக இருக்க வேண்டும்...!
- Get link
- X
- Other Apps
சிறைச்சாலை என்ற பெயரை கேட்டாலே, நமக்கு நினைவிற்கு வருவது சிறை கதவுகளின் கம்பிகளும் பூட்டும் தான். அதோடு, ஒரு பய உணர்ச்சியும் நமக்கு ஏற்படும் என்பதை மறுக்க இயலாது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ஐந்து நட்சத்திரச் வசதிகள் உள்ள சிறைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா.
ஏனென்றால் சிறைச்சாலை என்ற பெயரை கேட்டாலே, நமக்கு நினைவிற்கு வருவது சிறை கதவுகளின் கம்பிகளும் பூட்டும், மோசமான உணவு மற்றும் தண்டனையை அனுபவிக்கும் கைதியின் காட்சிகள் ஆகியவை நினைவுக்கு வரத் தொடங்குகின்றன. அதோடு, ஒரு பய உணர்ச்சியும் நமக்கு ஏற்படும் என்பதை மறுக்க இயலாது. ஆனால் கைதிகளுக்கு 5 நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகளை வழங்கும் பல சிறைகள் உலகில் உள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த சிறைகளில் உள்ள கைதிகளின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஐந்து நட்சத்திர விடுதியில் சாதாரண மனிதனுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. உலகின் மிகவும் வசதியான, ஆடம்பரமான சிறைகளைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம் ...
நீதி மையம் லியோபன் (Justice Center Leoben)
ஆஸ்திரியாவின் லியோபென் மலைப் பகுதியில் இந்த சிறைச்சாலை அமைந்துள்ளது. ஆடம்பர 5 நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் அனைத்தும் இந்த சிறையில் உள்ளது. இது ஜிம், ஸ்பா, பலவிதமான உள்ளரங்க விளையாட்டுகளை விளையாடுவதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது. இது தவிர, நீதி மையம் லியோபன் சிறையில் கைதிகளுக்கு தனிப்பட்ட குளியலறை, லிவிங் ரூம் மற்றும் சமையலறை போன்ற வசதிகளூம் உள்ளன.
JVA பியூஸ்புடல் சிறைச்சாலை (JVA Fuisbutel Prison)
இந்த சிறை ஜெர்மனியில் உள்ளது. இந்த சிறையிலும், கைதிகளுக்கு படுக்கைகள், தனிப்பட்ட குளியலறைகள், கழிப்பறைகள் போன்ற சிறந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனுடன், இந்த சிறையில் கைதிகளுக்கு சலவை இயந்திரங்கள், கான்பரென்ஸ் ரூம் போன்ற வசதிகளும் உள்ளன.
HMP எடிவெல் (HMP Etivel)
ஸ்காட்லாந்தில் உள்ள இந்த சிறையில் கைதிகளை சிறந்த மனிதராக உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு வசிக்கும் கைதிகளுக்கு சுமார் 40 வாரங்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளியூர் சென்று வேலை கிடைத்து இயல்பு வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற நோக்கில், பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன
Otago Corrections Facility
நியூசிலாந்தில் உள்ள இந்த சிறையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாலும், இங்கு வசிக்கும் கைதிகள் அனைத்து வசதிகளுடன் கூடிய அறைகள் வழங்கப்படுகின்றன.
சாம்ப்-டோலன் சிறை (Champ-Dollan Prison)
சாம்ப்-டோலன் சிறைச்சாலை சுவிட்சர்லாந்தில் உள்ளது. ஒரு காலத்தில், இந்த சிறைச்சாலை ஏராளமான கைதிகள் இருப்பதற்காக அவப்பெயரை பெற்றது. ஆனால் இன்று கைதிகளுக்கான வசதிகளுக்கு குறை ஏதும் இல்லாமல், அவர்களுக்கு அனைத்து வகையான வசதிகளும் வழங்கப்படுகின்றன.
ALSO READ : இப்படியும் அதிர்ஷ்டம் தேடி வரலாம்! டிரைவருக்கு அடித்த 200 கோடி ஜாக்பாட்: எப்படி தெரியுமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment