நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஃபேஸ்புக் செய்த மேஜிக்.. 58 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் இணைந்த மகள்! சுவாரஸ்ய நிகழ்வு

 இங்கிலாந்து நாட்டில் 58 ஆண்டுகளுக்கு பிறகு தனது தந்தையை அடையாளம் கண்டு, அவருடன் இணைந்துள்ளார் பெண் ஒருவர். அவரது தந்தையை தேடிக் கொடுத்துள்ளது ஃபேஸ்புக். இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் சாத்தியம் என்பதை இந்த நிகழ்வு வெளிக்காட்டி உள்ளது. 


அந்த நாட்டின் லிங்கன்ஷயர் பகுதியை சேர்ந்தவர் 59 வயதான ஜூலி லண்ட். அவருக்கு ஒரு வயது இருக்கும் போதே அவரது தந்தை பிரையன் Rothery மற்றும் தாயாரும் பரஸ்பரமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். அவரது தாய் வேறொருவரை மணம் செய்து கொண்டுள்ளார். 


ஆரம்பத்தில் தனது தந்தை யார் என்பது தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார் ஜூலி. ஒரு கட்டத்தில் அவருக்கு உண்மை தெரிய வந்துள்ளது. அதனால் தனக்கு உயிர் கொடுத்த அசல் தந்தையை தேடும் நோக்கில் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ளார். இருந்தும் அதை அவரால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை செய்ய முடியவில்லை. அவரது அம்மாவும் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். 


இந்நிலையில்தான், ஃபேஸ்புக் கம்யூனிட்டி குழுமம் ஒன்றில் தனது தந்தை குறித்தும், தனது தேடல் குறித்தும் பதிவு செய்துள்ளார் ஜூலி. அதோடு அந்த குழுவில் இருந்த உறுப்பினர்களின் உதவியையும் கோரியுள்ளார். அடுத்த சில நாட்களில் அந்த குழுவினரின் மூலம் தனது தந்தை உடன் இணைந்துள்ளார் ஜூலி. இருவரும் வெறும் ஒரு மணி நேர பயண தூரம் செய்தால் சென்றடைய கூடும் இடத்தில் தான் வாழ்ந்து வந்துள்ளனர். இருந்தாலும் அந்த விவரத்தை அறியாமல் பிரிந்து வாழ்ந்துள்ளனர். ஜூலி, லிங்கன்ஷயர் பகுதியிலும். அவரது தந்தை பிரையன், மேற்கு யார்க்ஷயரில் உள்ள டியூஸ்பரி எனும் இடத்தில் வசித்து வந்துள்ளனர். 

“இது ஒரு அதிசய அற்புதம். எனக்கு அதன் மீது அறவே நம்பிக்கை கிடையாது” என மகளுடன் இணைந்த பிரையன் தெரிவித்துள்ளார். அப்போது குறுக்கிட்ட ஜூலி, “இப்போது நாம் ஒன்று அப்பா!” என தெரிவித்துள்ளார். 

இருவருக்கும் நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 



ALSO READ : வீட்டிற்குள் புகுந்தது 15 அடி நீளமுள்ள ஆபத்தான நாகப்பாம்பு

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!