நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குளிர்காலத்தில் உங்களை healthy ஆக வைக்கும் உணவுகள் இதோ

 சில குறிப்பிட்ட உணவுகளை நாம் குளிர்காலத்தில் சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்கு பயனளிக்கும். அவை என்னவென்று என்பதை இங்கே பார்க்கலாம்.

குளிர்காலத்தில் உடலுக்கு உள் வெப்பம் இருக்க வேண்டியது அவசியமாகும். நம் உடலின் வெப்பம் தக்கவைக்கப்பட்டால், நாம் நோய்வாய்ப்பட வாய்ப்பில்லை. இத்தகைய சூழ்நிலையில், நம்மை சூடாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சில குறிப்பிட்ட உணவுகளை நாம் குளிர்காலத்தில் சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்கு பயனளிக்கும். அவை என்னவென்று என்பதை இங்கே பார்க்கலாம்.

உலர் பழங்கள்:

 அனைத்து மருத்துவர்களும் குளிர்காலத்தில் (Winter) உலர் பழங்களை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ், ஒமேகா 3 எஸ், மெக்னீசியம், தாமிரம், ஃவுளூரைடு, துத்தநாகம், கால்சியம், செலினியம் மற்றும் பல ஆரோக்கியமான புரதங்கள் இவற்றில் உள்ளன.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

 சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவது குளிர்காலத்தில் மிகவும் நன்மை பயக்கும். குளிர்காலத்தில், ஆரோக்கியத்திற்காக இதை சாப்பிடுவது நல்லது. இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஏ, பொட்டாசியம், சோடியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளன.

காளான்:

 காளான்களில் அதிக அளவு வைட்டமின் டி உள்ளது. எனவே குளிர்காலத்தில் காளான் கட்டாயம் சாப்பிட வேண்டும். செலினியம் இவற்றில் நிறைந்துள்ளது.

முட்டை:

 குளிர்காலத்தில் தவறாமல் முட்டைகளை சாப்பிட வேண்டும். இது வைட்டமின் A, B12, B6, E, K ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சலினியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் உள்ளன.

பருப்பு வகைகள்:

குளிர்காலத்தில் சாப்பிட பயறு மற்றும் பருப்பு வகைகள் சிறந்தவையாகும். இவை புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாக உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் பி 6 போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இவற்றில் உள்ளன.



ALSO READ : ஆச்சர்ய தகவல்! கொரோனா ‘இங்கு’ இல்லை; இல்லவே இல்லை..!!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!