நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அழகும், ஆபத்தும் நிறைந்த ‘யெல்லோஸ்டோன் பூங்கா’

 அமெரிக்காவின் பார்க் கவுண்டி வ்யோமிங் பகுதியில் இருக்கிறது, யெல்லோஸ்டோன் உயிரியல் பூங்கா. உலகின் முதல் தேசிய பூங்காவான இது 1872 மார்ச் 1-ந் தேதி உருவாக்கப்பட்டது.


இதன் மொத்த பரப்பளவு 8987 சதுர கிலோ மீட்டர்கள். ஐந்து நுழைவுவாயில்களைக் கொண்டது. 466 கிலோ மீட்டர்கள் சாலை வழியாகப் பூங்காவில் பயணிக்க முடியும். 5 சதவிகிதம் நீராலும், 15 சதவிகிதம் புல்வெளிகளாலும் சூழப்பட்டுள்ள இந்த பூங்கா 80 சதவிகிதம் அடர்ந்த காடுகளை உள்ளடக்கியது. இந்தப்பூங்காவில் 15 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே நடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.


உலக சுற்றுலாப் பயணிகளின் முதல் விருப்பமாக இருக்கும் இந்த யெல்லோஸ்டோன், இயற்கையாக எவ்வளவு அழகைக் கொண்டிருக்கிறதோ அவ்வளவு ஆபத்தையும் கொண்டிருக்கிறது. பூங்காவில் இருக்கிற ஒவ்வொன்றும் அழகு, அந்த ஒவ்வொன்றும் ஆபத்து..!

யெல்லோஸ்டோன் பூங்காவில் 340 அருவிகள் இருக்கின்றன. 300 வெப்ப நீரூற்றுகள் உள்ளன. எல்லாமே ஆபத்தானதுதான். இங்கிருக்கும் ஓல்ட் பெய்த்புல் (OLD FAITHFUL) என்கிற வெப்ப நீரூற்று ஒவ்வொரு முறையும் சுமார் 32 ஆயிரம் லிட்டர் வெப்ப நீரை 180 அடிக்கு மேல் கொப்பளிக்கிறது. ஆரம்ப காலங்களில் 60 நிமிடங்களுக்கு ஒரு முறை வெடித்தது. இப்போது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை கொப்பளிக்கிறது.


யெல்லோஸ்டோன் குறைந்தபட்சம் 10 ஆயிரம் புவிவெப்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. நிலப்பரப்பு அம்சங்கள் மற்றும் உலகின் வெப்ப நீரூற்றுகளில் மூன்றில் இரண்டு பங்கு யெல்லோஸ்டோனில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆபத்துகள் நிறைந்த இந்த பூங்காவிலும் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. கடா மான்கள், மான்கள், கூர் கொம்புடைய மான்கள், மலை சிங்கங்கள், நீர் நாய்கள், ஓநாய்கள் எனப் பல வகையான விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக எருமைகள், இங்கு அதிக அளவில் வாழ்கின்றன. உலகில் சுதந்திரமாக எருமைகள் வாழும் ஒரே இடமாக யெல்லோஸ்டோன் இருக்கிறது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்