நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீறும் ஆபத்தான பாம்பை அசால்டா பிடித்த பெண் -Viral Video

 வைரல் வீடியோ: இந்த வீடியோவை பார்ப்பவர்கள் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. 


பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த பெண் கொஞ்சம் கூட நடுங்கவும் இல்லை, பயப்படவும் இல்லை. மாறாக இந்த வீடியோவை பார்ப்பவர்கள் தான் ஒரு கணம் நடுங்கி போவார்கள். ஆம், அசால்டாக பாம்பை தன் கையால் பிடிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ உங்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமும் இல்லை.  

இந்த வீடியோவை பார்த்தால், ஒரு பெரிய பாம்புடன் ஒரு பெண் சண்டை போடுவதை காண முடிகிறது. சாலையில் செல்லும் பாம்பை அந்த பெண் பிடிப்பதாகத் தெரிகிறது. அந்த பாம்பின் தலைக்கு கீழ் கழுத்தை பிடித்து, கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். இறுதியில் அந்த பெண் அந்த பாம்பை (Snake) அடக்கி கட்டுக்குள் கொண்டு வருகிறார். 

ஆனால் அந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை. அவர் ஹெல்மெட் அணிந்திருப்பதால் பாம்பைப் பிடிக்கும் பெண்ணின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. எந்தவொரு பாதுகாப்புமின்றி அந்த பெண் பாம்பைப் பிடிப்பதை பார்த்து பலர் வியப்படைந்து உள்ளனர். வீடியோவின் இறுதியில், அந்த பெண் பாம்பை பிடித்தபடியே நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. 

இந்த காட்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் இதை பதிவு செய்துள்ளார். அதாவது சாலையோரத்தில் அந்த பெண் பாம்பைப் பிடித்தபடி நிற்பதைப் பார்த்தவுடன் அவர் இந்த நிகழ்வை தன் போனின் காமிராவில் பதிவு செய்தார். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவை பதிவு செய்தவர்கள் கூறுகையில், "நாங்கள் அந்த வழியாக சென்றபோது இந்த பெண் ஒரு பெரிய பாம்பைப் பிடிக்க முயற்சிப்பதைக் கண்டோம். இந்த தருணத்தை பதிவு செய்ய அங்கேயே நின்று பதிவு செய்தோம். ஆனால் அவரின் செயல் மிகவும் ஆபத்தானதாக இருந்தது" என்று வீடியோ எடுத்தவர் கூறியதாக, இந்த வீடியோவை பதிவிட்ட வைரல்ஹாக் கூறியுள்ளார்.


ALSO READ : 33 வருடங்களாக பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்தும் நபர்! காரணம் என்ன தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்