நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்க உதட்டில் மச்சம் இருக்கா? அப்ப அழகோட சேர்த்து இதெல்லாம் உங்ககிட்ட இருக்கும்

 உதடுகளைச் சுற்றி அல்லது உதடுகளுக்கு மேலே உள்ள மச்சம் நபரின் அழகை அதிகரிக்கிறது. அழகு குறித்த பாரம்பரிய விதிமுறையான சாமுத்ரிகா லட்சணத்திலும் இதைப் பற்றி கூறப்பட்டுள்ளது.  


உதடுகளில் மச்சம் உள்ளவர்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் உதடுகளைச் சுற்றி அல்லது உதடுகளுக்கு மேலே உள்ள மச்சம் நபரின் அழகை அதிகரிக்கிறது. அழகு குறித்த பாரம்பரிய விதிமுறையான சாமுத்ரிகா லட்சணத்திலும் இதைப் பற்றி கூறப்பட்டுள்ளது. 


சாமுத்திரிகா சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களின் மூலம், உதட்டுக்கு அருகில் மச்சம் (Mole) உள்ள நபர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். உதட்டருகில் மச்சம் இருப்பதன் முக்கியத்துவம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 


கீழ் உதட்டின் இடது பக்கத்தில் உள்ள மச்சம் 


ஒரு நபருக்கு உதடுகளின் கீழ் பகுதியில் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால், அத்தகைய நபர் நல்ல ஆடைகளை அணிந்து நல்ல உணவை உண்ண விரும்புவார் என்று நம்பப்படுகிறது. இதனுடன், இவர்கள் தங்கள் விஷயங்களை நன்றாக கையாள்வதில் நிபுணத்துவம் உள்ளவர்களாக இருப்பார்கள். 


உதட்டின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் மச்சம்


உதட்டின் (Lips) வலது பக்கத்தின் மேல் பகுதியில் மச்சம் உள்ளவர்கள், வாழ்க்கைத் துணையின் விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் விரும்பியவர்களுடன் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு பிடிக்காதவர்களுடன் அவர்கள் சரியாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது. இவர்கள் வசதிகள் நிறைந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.


உதட்டின் மேல் இடது பக்கத்தில் மச்சம்


உதட்டின் மேல் இடது பக்கத்தில் மச்சம் இருப்பது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுவதில்லை. அத்தகையவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்காது. ஆனால் இந்த நபர்களின் சிறப்பு என்னவென்றால், இவர்கள் தங்கள் மகிழ்ச்சியான தன்மையால் மற்றவர்களை மிக விரைவாக ஈர்க்கிறார்கள்.


உதட்டின் கீழ் மச்சம் இருந்தால் இதுதான் பொருள் 


உதட்டின் கீழ் மச்சம் இருந்தால், அந்த நபர் வறுமையால் வாடுவார் என்பது பொருள்.  உதடுகளுக்கு மேல் இடது கை பக்கம் மச்சம் உள்ளவர்கள், தங்கள் குழந்தைகளை மிகவும் நேசிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் தாராள மனப்பான்மை காரணமாக, குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான சூழல் இருக்கும். இந்த மக்கள் நம்பகமானவர்களாக கருதப்படுகிறார்கள்.


கீழ் உதட்டின் வலது பக்கத்தில் மச்சம்


உதடுகளின் கீழ் பகுதியில் வலது பக்கத்தில் மச்சம் உள்ளவர்கள், தங்கள் வேலையில் திறமையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் தங்கள் பணித் துறையில் பிரபலமாக இருக்கிறார்கள். இவர்கள் காலத்துடன் சேர்ந்து முன்னேறுவதற்கும், விஷயங்களை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதையும் அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் தங்களை எப்படி கையாள்வது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.


உதட்டில் மச்சம்


ஒரு நபரின் உதடுகளில் மச்சம் இருந்தால், அவர் மிகவும் பேசக்கூடியவராக இருப்பார். அத்தகையவர்கள் மிகவும் இனிமையாகப் பேசுவார்கள் என்பது உறுதி. இதன் காரணமாக மக்கள் அவர்களை நோக்கி விரைவாக ஈர்க்கப்படுகிறார்கள். உதட்டின் மேல் உள்ள மச்சம் ஆடம்பரத்தையும் சிற்றின்பத்தையும் குறிக்கிறது. இவர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்க விரும்புகிறார்கள்.



ALSO READ : ஆரோக்கியமான சருமத்திற்கு இதை மட்டும் சாப்பிடுங்கள்.. நிபுணர் டிப்ஸ்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்