நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கண்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்..!

சோர்வாக இருக்கும் கண்களுக்கு புத்துணர்ச்சி ஊட்ட, சில்லென்ற தண்ணீரை‌ முகம் மற்றும் கண்களில் ஸ்ப்ளாஷ் செய்து 10 முதல் 15 முறை வரை கழுவவும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதே போல முகத்தின் பொலிவு கண்களில் தெரியும். நீங்கள் எவ்வளவு உற்சாகமாக காட்சியளிக்க முயற்சித்தாலும், கண்கள் உங்கள் சோர்வைக் காட்டிக்கொடுத்துவிடும். அழகு மட்டுமின்றி, நீண்ட நேரம் நீங்கள் மொபைல் மற்றும் லேப்டாப்களை பார்ப்பதால் கண்களில் ஏற்படும் அழுத்தம் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தீவிரமான தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது.


கண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று டாக்டர் நிகிதா கோலி எளிமையான ஆயுர்வேத குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ,

முன்னெப்போதும் இல்லாத வகையில் நம்முடைய கண்களுக்கு அதிக வேலை கொடுத்து வருகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால், சில ஆண்டுகளாகவே அதிக நேரத்தை மொபைல் திரையில் தான் செலவழிக்கிறோம். இது கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி பல்வேறு விதமான தலைவலி பிரச்சனைகளை உண்டாக்குகிறது. அதுமட்டுமின்றி கண்ணெரிச்சல், கண்கள் வறண்டு போதல், கருவளையங்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்டவையும் ஏற்படுத்துகிறது ஆயுர்வேத மருத்துவர் நிகிதா கோலி கூறியுள்ளார்.

கோவிட்-19 தொற்று பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ளவும், தொற்று பாதிப்பை குறைக்கவும், உலகம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மொபைல் மற்றும் லேப்டாப்கள் பயன்பாடு கணிசமாக அதிகரித்தது. பலருக்கும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை மட்டுமே இருந்த லேப்டாப் மற்றும் மொபைல் பயன்பாடு கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 10 மணி நேரங்கள் வரை நீடித்திருந்தது. இது பல்வேறு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது.

இயற்கையான சூரிய வெளிச்சத்திற்கு பழக்கப்பட்ட நம் கண்கள் தூய்மையான செயற்கை ஒளியை எதிர்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுகிறது. எல்இடி மற்றும் டிஎஃப்டி விளக்குகளின் மூலம் நாம் நீண்ட காலத்திற்கு செயற்கையான ஒளியை காண்பதால் நம்முடைய பார்வையும் குறைகிறது.

ஆயுர்வேத முறைப்படி கண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர் பகிர்ந்த குறிப்புகள்...

* காலையில் எழுந்தவுடன், வாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு கண்களை மூடியபடியே ஒரு சில நேரங்கள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு அதனை வெளியே துப்பி விடவும். காலைக்கடன்களை முடிப்பதற்கு முன்போ அல்லது அதற்கு பின்போ, உங்கள் வசதிக்கு ஏற்றபடி நீங்கள் இதை தினமும் 2 முதல் 3 முறை செய்யலாம்.

* சோர்வாக இருக்கும் கண்களுக்கு புத்துணர்ச்சி ஊட்ட, சில்லென்ற தண்ணீரை‌ முகம் மற்றும் கண்களில் ஸ்ப்ளாஷ் செய்து 10 முதல் 15 முறை வரை கழுவவும். எப்போதுமே கண்களில் நேரடியாக சூடான அல்லது ஐஸ் தண்ணீரை பயன்படுத்தவேண்டாம். உங்கள் உடலின் தட்பவெப்ப நிலைகள் கண்களுக்கும் பொருந்தும்.
* கண்களுக்கு மை தீட்டும் பழக்கம் இருந்தால் நீங்கள் ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட கண்மை வாங்கி பயன்படுத்தலாம். இதனால், கெமிக்கல் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

* கடைகளில் கண்களை சுத்தம் செய்வதற்கான கப்புகள் கிடைக்கின்றன. அதை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். அச்தே போல திரிபலா ஐவாஷ் என்ற ஆயுர்வேத மருந்தையும் கண்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம்.

* கண்கள் மிகவும் வறட்சியாக காணப் பட்டால் அல்லது பார்வை குறைபாடு ஏற்படுவது போல் தோன்றினால் நீங்கள் ஆயுர்வேத சிகிச்சைகளில் ஒன்றான ஷட்கர்மா சிகிச்சையை ஆயிர்வேத மருத்துவரின் பரிந்துரையில் மேற்கொள்ளலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்