நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காயங்களை கடிதங்களால் குணமாக்கிய ராஷ்பின்

 தந்தை பிரிந்து சென்றதால் நிலைகுலைந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி, இப்போது மீண்டு வந்திருக்கிறார்.


கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர், ராஷ்பின் அப்பாஸ். இவரது தந்தை குடும்பத்துடன் வாழ விருப்பமில்லாமல் பிரிந்து சென்றுவிட்டார். தந்தை சென்றதால் தாய் மற்றும் சகோதரருடன் ராஷ்பின் வளர்ந்தார். சிறுவயதிலேயே தந்தையின்றி வளர்ந்த ராஷ்பின் மன அழுத்தத்திற்கு ஆளானார்.

குடும்பம் கடும் வறுமையில் சிக்கியதால், வாழ்வதற்கே பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. மன அழுத்தத்தால் குழப்பம் நிறைந்த வாழ்க்கையை ராஷ்பின் வாழத்தொடங்கினார். மன அழுத்தம் அதிகரித்து மன உளைச்சல் ஏற்பட்டதால் நிதானமின்றி ராஷ்பின் காணப்பட்டார்.

சில நண்பர்கள் மூலம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தொடங்கிய ராஷ்பின், தனது புகைப்படம் மற்றும் தான் செய்யும் சிறுசிறு கைவினைப் பொருட்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட ஆரம்பித்தார். அதைக்கண்டு பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

ஒருமுறை மெக்ஸிகோவில் இருந்து சாரா என்ற பெண் ராஷ்பின்னுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். “உங்களது புகைப்படங்களை நான் மிகவும் விரும்புகிறேன். உங்களது முகவரியை சொல்லுங்கள், நான் கடிதத்துடன் உங்களுக்கு ஒரு பரிசும் அனுப்புகிறேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதைப்பார்த்து ஆச்சரியமடைந்த ராஷ்பின், சாராவுக்கு தனது முகவரியை அனுப்பினார். அதன்பின்னர் தனக்கு சாராவிடம் இருந்து எப்போது கடிதம் வரும் என்ற எதிர்பார்ப்பு ராஷ்பினுக்கு அதிகரித்தது.

சில மாதங்களாகத் தொடர்ந்து தபால் அலுவலகத்திற்கு ராஷ்பின் சென்று வந்தார். ஆனால், கடிதம் வரவில்லை. இறுதியாக ஒருநாள் சாராவின் கடிதம் ராஷ்பினை வந்து சேர்ந்தது. கடிதத்துடன் பரிசும் வந்திருந்தது.

சாராவிடம் இருந்து வந்த முதல் கடிதம் ராஷ்பினின் வாழ்வில் இருந்த அழுத்தங்கள் அனைத்தையும் துடைத்தது. புது மறுமலர்ச்சியை அவரது வாழ்வில் ஏற்படுத்தியது. அதன்பின்னர் கடிதங்களை பரிமாறிக்கொள்ளும் சமூக வலைத்தளங்களுக்கு ராஷ்பின் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.

பிரேசில், இத்தாலி, கனடா, ஸ்பெயின், துருக்கி, ரஷியா உட்பட 43 நாடுகளில் இருந்து இப்போது ராஷ்பினுக்கு கடிதங்கள் வருகின்றன. அந்த நாடுகளில் எல்லாம் ராஷ்பினுக்கு நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்.

கடிதங்கள் வருவது மட்டுமின்றி, ராஷ்பினும் பதிலுக்கு கடிதங்களை எழுதி வருகிறார். ஆங்கிலத்திலேயே அனைத்து கடிதங்களும் எழுதப்படுகின்றன. குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ராஷ்பினின் அனைத்து நண்பர்களுமே 17 முதல் 23 வயது கொண்டவர்கள்தான்.

அண்மையில் சர்வதேச ஐ.நா. மனநிலை ஆரோக்கியத்திற்கான இந்தியாவின் ஆன்லைன் கூட்டத்தில் ராஷ்பின் பங்கேற்று பேசியிருந்தார். தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், சமூகத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை பட்டியலிட்டிருந்தார்.

திருவம்பாடியில் உள்ள அல்போன்ஸா கல்லூரியில் பி.எஸ்சி. உளவியல் பட்டப்படிப்பை படிக்கத் தொடங்கியிருக்கும் ராஷ்பின், மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலத்திற்காகப் பணிபுரிய வேண்டும் என்பதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.மேலும், தனக்கு கடிதம் அனுப்பும் வெளிநாட்டு நண்பர்களை ஒருமுறை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சாராவிடம் இருந்து வந்த முதல் கடிதம் ராஷ்பினின் வாழ்வில் இருந்த அழுத்தங்கள் அனைத்தையும் துடைத்தது. புது மறுமலர்ச்சியை அவரது வாழ்வில் ஏற்படுத்தியது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!