நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

14 நிமிடங்களில் 25 நண்டுகளை சாப்பிட்ட நபர்: பரபரப்பான போட்டி

 அமெரிக்காவில் கல் நண்டுகளின் கால்களை வெகமாக உண்ணும் வேடிக்கையான போட்டியில் நபர் ஒருவர் 25 நண்டு கால்களை சாப்பிட்டு அசத்தியுள்ளார்.

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள FLORIDA KEYS தீவில் மீன் விற்பனையாளர்களால் நடத்தப்பட்ட விழா ஒன்றில், நண்டுகளை உண்ணும் போட்டி நடத்தப்பட்டது.

தலா 25 நண்டுகளின் ஓட்டை உடைப்பதற்கான சிறிய இரும்பு சாதனம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி போட்டியாளர்கள் தங்களது போட்டியினை ஆரம்பிக்கலாம்.



14 நிமிடங்கள் 29 விநாடிகளில் 25 நண்டுகளை சாப்பிட்ட, 55 வயதான ஜூவான் மல்லான் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் ஆர்வமாக இந்த போட்டியினை கண்டுகழித்துள்ளனர்.



ALSO READ : அப்பாவோட வேலைல தொந்தரவு தர்றது தான் எவ்ளோ ஜாலியா இருக்கு! – வைரல் வீடியோ

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்