நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சக்தி வாய்ந்த மர்ம குகை… இந்த தூண் விழும்போது கலியுகம் மண்ணுக்குள் புதையும்? சிவன் கோவிலில் நடக்கும் அதிசயம்

 நாம் வாழும் இந்த பூமி மிக சக்தி வாய்ந்த மாயை என்றே கூறலாம். இங்கு நாம் கண்ணால் பார்க்கும் சில விடயங்கள் நம்மை பிரம்மிக்க செய்யும்.

கடவுளின் படைப்பில் மனிதர்கள் கூட சில சமயம் அதிசயவாதிகளாக மாறுகின்றனர்.

அப்படி இருக்க நாம் வணங்கும் கடவுளின் அமைவிடங்கள் எப்படி இருக்கும்... நிச்சயம் அங்கு மர்மமும், அதிசயம் காத்திருக்கும் என்பது மறக்க முடியாத ஒன்று.

இன்று அப்படி ஒரு இடத்தை பற்றிதான் பார்க்க போகின்றோம்... என்னுடன் சேர்ந்து பயணிக்க தாயாராகுங்கள். மர்மம் நிறைந்த கோவிலான ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவில் பற்றி உங்களில் பலர் கேள்வி பட்டிருக்க வாய்ப்புண்டு.

 எனினும் அங்கு நடக்கும் மர்மங்களுக்கு என்ன காரணம் என்பதை என்றாவது ஆராய்ந்தது உண்டா?

அதிசயம் மிக்க இந்த சிவன் கோவிலில் நிறைய மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே இருக்கின்றன. ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த மர்மங்கள் நிறைந்த குகை கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் இருக்கிறது.

ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்ட அதிசயக் கோவில் தான் இந்த ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோவில். இந்த கோவில் மட்டுமல்ல.


இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த குகை ஒன்று இருக்கிறது. இந்த குகை மற்ற குகைகளைப் போல அல்ல.

தண்ணீர் நிறைய இருக்கும். அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது. இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினமான விஷயம் தான். குறிப்பாக மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.


இந்த குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறதாம்.

சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் நான்கின் அடையாளமாகத் தான் அந்த நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும், ஒவ்வொரு தூணாக கீழே விழும் என்பது தான் நியதியாகும். அதன்படி ஏற்கனவே மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்து விட்டனவாம்.


இன்னும் ஒரே ஒரு தூண் மட்டுமே மிச்சமிருக்கிறது. அந்த நான்காம் தூண் தான் கலியுகத்தைக் குறிக்கும் தூணாம். அந்த நான்காம் தூண் தான் இந்த பிரபஞ்சத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த தூண் விழும் நாள் தான் கலியுகத்தின் கடைசி நாளாக இருக்குமாம். அன்று உலகம் புதைந்து அழிந்து விடும் என்று நம்பப்படுகின்றது.


ALSO READ : மனிதரை போல யோசித்து அடுத்த நொடியே மாடு செய்த செயல்....! ஐந்தறிவு ஜீவனுக்குள் இப்படி ஒரு ஞானமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!