நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பல பேரின் கனவு மற்றும் லட்சியமாக இருக்கும்...ஆதாரப்பூர்வமாக திருமலையில் நடந்த முதல் திருமணம் யாருடையது தெரியுமா?

திருப்பதியில் தினசரி ஆயிரக்கணக்கில் திருமணம் நடைபெறுவது இயல்பாகிவிட்டது. திருப்பதியில் நடைபெற்ற முதல் திருமணம் யாருடையது? இதைப் பற்றி யோசித்து பார்த்திருக்கிறீர்களா? திருமலையில், கொடிய விலங்குகள், நச்சுப் பூச்சிகள்... யாரும் குடியிருந்து நந்தவனம் அமைக்கத் தயாரில்லை... நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுதும் தொகுத்தவர் நாதமுனிகள்...அவரது பேரன் ஆளவந்தார்..... அவரது பேரன் திருமலை நம்பி திருமலையில் இருக்கும் வேங்கடவனுக்கு கைங்கரியம் செய்ய திருப்பதி திருமலைக்கு சென்றார்கள். திருவேங்கடவனுக்கு சேவையாற்ற திருமலைக்கு சென்ற திருமலை நம்பியின் தங்கை காந்திமதி...


திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பல பேரின் கனவு மற்றும் லட்சியமாக இருக்கும்... ஆதாரப்பூர்வமாக திருமலையில் நடந்த முதல் திருமணம், திருப்பெரும்புதூர் சாம வேத விற்பன்னர் கேசவ சோமயாஜி என்பவருடையது. மணமகள் காந்திமதி அம்மையார்  


நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுதும் தொகுத்தவர் நாதமுனிகளின் வம்சத்தில் வந்தவர் காந்திமதி. கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் திருமணம் நடந்து, இரு வருடங்களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை யார் தெரியுமா?


திருப்பதியில் நடைபெற்ற முதல் திருமணத்தில் பிறந்த வேதவித்து ஸ்ரீ ராமானுஜர்.  வடமொழியில் ஸ்ரீ ராமானுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ ராமானுஜர். திருவாய்மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுபவர். தமிழ்நெறி போற்றும் வைணவர்  .


காந்திமதியின் திருமணம் உலகம் போற்றும் மகனை உலகிற்கு அளித்ததற்கு திருப்பதி வேங்கடேசரின் அருள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது. இந்தத் தகவல் எத்தனைப் பேருக்குத் தெரியும்?


திருப்பதியில் இலவசமாக திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும் திருப்பதி தேவஸ்தானம் அருமையான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?  தேவஸ்தான இணைய தளத்திற்கு சென்று கல்யாணத் திட்டம் பகுதியில் மணமகன் மற்றும் மணமகளின் பெயர், வயது, ஆதார் அட்டை எண், திருமண நாள், நேரம் உள்ளிட்டவற்றை அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.


திருமணம் செய்வதற்கு பதிவு செய்து கொள்பவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். மணமக்கள் அந்த ஒப்புகைச் சீட்டுடன் முகூர்த்த நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கல்யாண மண்டபத்திகு வந்து அலுவலர்களிடம் அதை கொடுக்க வேண்டும்.


ஒப்புகைச் சீட்டை ஊழியர்கள் சரிபார்த்த பின் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அது, மேள வாத்தியம், புரோகிதத்திற்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிறகு, மணமக்களுக்கு இலவச அறை, மஞ்சள், குங்குமம், கங்கணம், அட்சதை உள்ளிட்டவற்றை தேவஸ்தான ஊழியர்கள் கொடுப்பார்கள். இதைத் தவிர திருமணத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மணமக்கள் கொண்டுவர வேண்டும்.  


இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த திருமண திட்டத்தில் அனுமதி வழங்கப்படும். காதல் திருமணம், 2-ம் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அனுமதி கிடையாது.


திருமணம் முடிந்த பின் 25 ரூபாய் கொடுத்தால் மணமக்கள், அவர்களின் தாய், தந்தை என 6 பேருக்கு விரைவு தரிசனம் செய்ய அனுமதி கொடுக்கப்படும். 12 லட்டுகளும் புதுமண தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும். 


திருமணம் செய்து கொள்பவர்கள் இலவசமாக தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பையும் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.  



also read : திருமணத்தில் கலந்துக் கொள்ள விருந்தினர்களை வாடகைக்கு எடுக்கும் விசித்திர நாடு!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்