Benefits Of Rice: அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா
- Get link
- X
- Other Apps
அரிசி உணவால் நம்முடைய உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
அரிசி சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று பலர் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அது ஒரு தவறான கருத்து. அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என்று சமீபத்தில் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுவையான உணவு மற்றும் நமக்கு மிகவும் பழக்கமான உணவு என்பதை கடந்து அரிசியில் (Rice) பல்வேறு சத்துக்கள் உள்ளன. பல விதமான நம்முடைய உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு அரிசியில் உள்ள பல குணங்கள் உதவுகின்றன. எனவே அரிசி உணவால் நம்முடைய உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
* அரிசி ஒரு ப்ரீபயாட்டிக் தானியம். அரிசி உணவுகள் என்பது நமக்கான உணவாக மட்டுமன்றி, உடலிலுள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்கும் உணவாக அமைகிறது.
* அரிசியை எல்லா விதமான காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் இறைச்சிகளுடன் சேர்த்து சுவையாக சமைக்கலாம். காய்கறியுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.
* அரிசி சோறு என்பதைத் தவிர்த்து பாலீஷ் செய்யப்படாத அரிசியில் பி வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லா வயதினருக்கும் அரிசி சாதம் மிகவும் எளிதாக செரிமானமாகும்.
* அரிசி உணவு சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைய உணவு உண்ட தான ஒரு உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி பசிக்கும் உணவு தோன்றாது.
* முடி உதிர்தல் புகார் இருந்தால் கண்டிப்பாக அரிசி சாப்பிட வேண்டும். ஏனெனில் இது முடியை பராமரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.
ALSO READ : குளிர்காலத்தில் உங்களை healthy ஆக வைக்கும் உணவுகள் இதோ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment