நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?

 உடல் எடை அதிகமாக இருந்தால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. அதேபோல், பக்கவாதம் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.


உடல் பருமன் ஒரு பேரிடர் நோய் என்று உலகெங்கிலும் உள்ள சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆண்டுதோறும் உடன் பருமன் தொடர்பான சிக்கல்களால் குறைந்தது 28 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக கூறும் ஆய்வுகள் அச்சுறுத்துகின்றன.


நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (Centers for Disease Control and Prevention) தரவுகளின் படி, 2017 முதல் 2018 வரை அமெரிக்காவில் 42.4% முதியோர்களுக்கு உடல் பருமன் பாதிப்பு இருந்தது.


உடல் எடை அதிகமாக இருந்தால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. அதேபோல், பக்கவாதம் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. ஒருவரது உடல் எடையை அதிகரிப்பதற்கு அடிப்படை நாம் உண்ணும் உணவில் இருக்கும் கலோரிகள் தான்.

கலோரிகள் என்பது நமது உடலுக்கு கிடைக்கும் சக்தியை அளவிடும் அலகாகும். சில உணவுகளில் எவ்வளவு சக்தி உள்ளது என்பதை அளக்க நாம் கலோரி என்ற அலகை பயன்படுத்துகிறோம். ஒருவருக்கு தினசரி எவ்வளவு சக்தி தேவை என்பதை அளக்கவும் (required energy) கலோரி பயன்படுகிறது.  


1 கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரிகள் உள்ளது. 1 கிராம் கொழுப்பில் 9 கலோரிகள் உண்டு. 1 கிராம் புரதச் சத்தில் 4 கலோரிகள் உண்டு. 


சில உணவுப் பொருட்களில் உள்ள கலோரி அளவுகளை தெரிந்துக் கொள்வோம். 100 கிராம் பொருட்களுக்கு நிகரான கலோரி அளவுகள்: 


பசுவின் பால் 100 மி.லி – 65 கலோரிகள்

எருமைப்பால் 100 மி.லி – 117 கலோரிகள்

வெல்லம் 100 கிராம் – 383 கலோரிகள்

தேன் 100 மி.லி – 320 கலோரிகள்

எள் 100 கிராம் – 564 கலோரிகள்

நிலக்கடலை  100 கிராம் – 549 கலோரிகள்

வாழைப்பழம் 100 கிராம் – 150 கலோரிகள்

மரவள்ளிக் கிழங்கு  100 கிராம் – 159 கலோரிகள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு  100 கிராம் – 152 கலோரிகள்

உருளைக்கிழங்கு 100 கிராம் – 99 கலோரிகள்

கோதுமை ரொட்டி 100 கிராம் – 238 கலோரிகள்

கோதுமை மாவு  100 கிராம் – 348 கலோரிகள்

சப்பாத்தி  100 கிராம் – 124 கலோரிகள்

அரிசி 100 கிராம் – 345 கலோரிகள்

கேழ்வரகு 100 கிராம் – 331 கலோரிகள்

சோளம் 100 கிராம் – 342 கலோரிகள்

கம்பு வகை 100 கிராம் – 360 கலோரிகள்


இவற்றில் இருந்து உங்கள் எடை மேலாண்மைக்கு எந்த வகை உணவுகள் சரியானவை என்பதை தீர்மானித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கவும்.


ALSO READ : Benefits Of Rice: அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!