உலகிலேயே மிகப் பழமையான Pyramid ரகசியத்தை சீனா மறைப்பது ஏன்?
- Get link
- X
- Other Apps
உலகிடம் இருந்து பல விஷயங்களை மறைத்து வரும் சீனா மர்மமாய் பாதுகாக்கும் பிரம்மாண்ட ரகசியம்...
உலகமே அறியாத மர்மமான பிரமிடுகள் சீனாவில் உள்ளன. இந்த மர்ம பிரமிடுகளை பாதுகாப்பது சீன ராணுவம் தான். இந்த பிரமிடுகளில் சீனாவின் வரலாற்றுடன் தொடர்புடைய ரகசியங்கள் மறைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது,
இந்த பிரமிடுகள் சீனாவின் சியான் நகரிலிருந்து 100 கி.மீ தொலைவில் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பிரமிட் வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த மர்மம் இன்று வரை வெளிவரவில்லை.
சீனா பல நூற்றாண்டுகளாக பிரமிடுகளின் ரகசியங்களை மறைத்து வைத்துள்ளது. 1912 ஆம் ஆண்டு, ஃபிரெட் மேயர் ஷ்ரோடர் என்ற அமெரிக்க தொழிலதிபர் அங்கு வந்தபோது தான் இந்த பிரமிடுகள் பற்றிய தகவல்கள் உலகிற்கு கிடைத்தன.
சீனாவில் 8,000 ஆண்டுகள் பழமையான பிரமிடு உள்ளதாக அமெரிக்க தொழிலதிபர் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார். 1000 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட பிரமிடுகளும் சீனாவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகு, அமெரிக்க விமானப்படை விமானி ஜேம்ஸ் கோஸ்மேன் இந்த பிரமிட்டைப் பார்த்தார். இது எகிப்தின் பெரிய பிரமிட்டை விட உயரமானது என்றும், அதன் மேல் படிகம் போன்ற ஒரு கல் இருப்பதாகவும் கூறினார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment