வீட்டிற்குள் புகுந்தது 15 அடி நீளமுள்ள ஆபத்தான நாகப்பாம்பு
- Get link
- X
- Other Apps
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் helicopter_yatra_என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இது இதுவரை பல லட்சத்திற்கும் அதிகமான பயனர்களால் விரும்பப்பட்டது.
சமூக ஊடகங்களில் எப்போது என்ன மாதிரியான வீடியோ வைரலாகும் என எதுவும் சொல்ல முடியாது. இந்த நேரத்தில், ஒரு பெரிய நாகப்பாம்பின் வீடியோ இணையத்தில் அதிகம் பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது மற்றும் மில்லியன் கணக்கான மக்களால் லைக் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வீடியோவை பார்க்கும் போது சுமார் 15 அடி நீளமுள்ள ஆபத்தான நாகப்பாம்பு ஒன்று வீட்டிற்கு நுழைந்தது தெரிந்தது. பொதுவாக, யாராக இருந்தாலும் இவ்வளவு பெரிய பாம்பைப் பார்த்து பயப்படுவார்கள். இதில், வீட்டில் நாகப்பாம்பு இருப்பதைப் பார்த்த ஒருவர், உடனடியாக அந்த பாம்பை தனது கைகளால் தூக்கிப் பிடித்தார். இதன் பிறகு வீடியோவில் காணும் காட்சியை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. உண்மையில், அந்த நபர் தனது கைகளில் நாகப்பாம்பை தூக்கியவுடன், பாம்பு எதிர்வினையாற்றவில்லை.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் helicopter_yatra_என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இது இதுவரை பல லட்சத்திற்கும் அதிகமான பயனர்களால் விரும்பப்பட்டது. இந்த நாகப்பாம்பை பார்த்தாலே ஒருகணம் பயம் ஏற்படுகிறது. இந்த வீடியோ ஆச்சரியமாக இருக்கிறது என நெட்டிசன்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ : இவருதாங்க செக்யூரிட்டி கார்டு; பத்திரமா இல்லைன்னா அவ்ளோ தான்!
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment