கழுத்து கருமையை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்
- Get link
- X
- Other Apps
உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.
பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். நகைகள் அணிவது, உடல் வெப்பம், ஒவ்வாமை காரணமாக இந்த பிரச்சினைகள் தோன்றும். எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம். உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.
சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கழுத்தில் உள்ள கருமை படிப்படியாக மறையத் தொடங்கிவிடும்.
கழுத்து கருமையை போக்க ஆப்பிள் சிடர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும்.
சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இதை வாரம் 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Related Tags : வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment