இறந்தவர் சாம்பலில் இருந்து நகைகள் செய்யும் வினோத பெண்மணி
- Get link
- X
- Other Apps
அன்புக்குரியவர் இல்லாத குறையை போக்க, இந்த பெண் ஒரு விசித்திரமான வழியை கண்டுபிடித்துள்ளார். இந்த பெண் இறந்தவர்களின் சாம்பலில் இருந்து நகைகளை தயாரித்து வருகிறார்.
அன்புக்குரியவர்களை இழப்பது மிகப் பெரிய சோகம். அதுவும் தனிமையிலும், மறைந்தவர் மனதிற்கு பிடித்த விஷயங்களை பார்க்கும் போதும், இறந்தவர் ஆவலுடன் எதிர்பார்த்த குடும்ப நிகழ்வுகளின் போதும், நம் மனதை துன்பம் வாட்டி வதைக்கும். இவ்வாறு சோகத்தில் மூழ்கிய ஒரு பெண் செய்த செயல் உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.
அன்புக்குரியவர் இல்லாத குறையை போக்க, இந்த பெண் ஒரு விசித்திரமான வழியை கண்டுபிடித்துள்ளார். இந்த பெண் இறந்தவர்களின் சாம்பலில் இருந்து நகைகளை தயாரித்து வருகிறார். இதனை பயன்படுத்தும் போது, இறந்தவரது குடும்ப உறுப்பினர்கள் விசேஷ சந்தர்ப்பங்களில் தன்னுடன் இருப்பதை உணர முடியும் என அவர் கூறுகிறார்.
திருமணத்தின் போது தந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஒரு மணபெண் நினைத்தாள். தி சன் என்னும் பத்திரிக்கையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ட்ரீ ஆஃப் ஹோப் என்ற வணிகத்தை நடத்தும் மெக், விசேஷ சந்தர்ப்பங்களில் அன்புக்குரியவர் இல்லாத குறையை போக்க உதவுவதாக என்று கூறுகிறார். மணமகளான அலிசா தனது திருமண நாளில் தன் தந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினாள். இறந்த அவளது தந்தையின் சாம்பலில் செய்யப்பட்ட மோதிரத்தின் மூலம் அலிசா தனது தந்தை தன்னுடன் ஒவ்வொரு கணமும் இருப்பதாக உணர்ந்தார்.
இதற்கான மெக் சாம்பலை நகையில் பதிக்கும் கல போல் வடிவமைத்து, அதன் மீது நீல நிறத்தில் சாயம் பூசினார். இதன் பிறகு, அந்த சாம்பல் கல் வெள்ளி நிற உலோகத்தில் பதித்து, மோதிர வடிவம் கொடுக்கப்பட்டது, இது பார்ப்பதற்கு சாதாரண மோதிரம் போல் இருந்தது.
இது மட்டுமல்ல, நெருக்கமானவர்கள் இல்லாத குறையை போக்க, சாம்பலால் செய்யப்பட்ட கழுத்தணிகள் மற்றும் சிலைகளும் செய்து தருகிறார். தங்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களின் நினைவைப் பாதுகாக்க பலர் மெக்கை அணுகுகிறார்கள். மெக் அவர்களுக்காக இறந்தவர்களின் சாம்பலில் இருந்து கழுத்தணிகள், மோதிரங்கள், சிறிய சிற்பங்கள் போன்றவற்றைச் செய்கிறார்.
ALSO READ : கடலோரத்தில் அதிர்வலைகள்! சிதறிக் கிடக்கும் கடல் உயிரினங்களின் சடலங்கள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment