தாய்ப்பால் அவசியம்! இருவரின் சிந்தனைத் திறனை இழப்பதை தடுக்கிறது!
- Get link
- X
- Other Apps
தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களை விட, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் குழந்தைகள் சிறந்த சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Breast Milk Benefits: தாய்ப்பால் கொடுப்பதன் மற்றொரு பயனை அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மூலம் அவர்களுக்கு சிந்திக்கும் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் குறைவதற்கான ஆபத்து மிகக்குறைவு என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
குழந்தை மட்டுமின்றி, வயிற்றில் வளரும் போது தாயின் மூளைக்கு சாதகமான சில தாக்கங்கள் ஏற்படுத்துவதாக ஆய்வை நடத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களை விட, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் குழந்தைகள் சிறந்த சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மூளை மற்றும் உடலில் நேர்மறையான விளைவு:
ஆராய்ச்சியாளர் மோலி ஃபாக்ஸ் கூறுகையில், பல முந்தைய ஆய்வுகளில், தாய்ப்பால் குழந்தைக்கு கொடுத்தால், நீண்ட காலம் ஆரோக்கியமாக அவர்கள் இருப்பார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் எங்கள் ஆய்வு அது தாயின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று கூறுகிறது. 50 வயதில் கூட, தாய்ப்பால் கொடுக்காத பெண்களை விட தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மூளை சிறப்பாக செயல்படும் என்று ஆராய்ச்சி கூறுகிறது என்றார்.
மேலும் மோலி கூறுகையில், ஆராய்ச்சியின் முடிவுகள் அதிர்ச்சிகரமானவை, ஏனென்றால் 50 வயதில் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் குறைகிறது. அல்சைமர் மற்றும் டிமென்ஷியா ஆபத்து அதிகரிக்கிறது. அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் அதை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்றார்.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது:
பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு ஆரம்பகால மரணம் 20% குறைவு.
தொற்று அபாயத்தை குறைக்கிறது:
தாய்ப்பால் குடிப்பது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு அபாயத்தை குறைக்கிறது. குடல் தொற்று ஏற்படும் ஆபத்து சுமார் 64%குறைகிறது. 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளில் உணவு ஒவ்வாமை குறைவாகவே காணப்படுகிறது.
சுவாச அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது:
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு 72% க்கும் குறைவாகவே சுவாச தொற்று அபாயம் உள்ளது. நிமோனியா, பருவகால குளிர் ஆபத்தும் குழந்தைக்கு குறைவாக இருக்கும்.
குழந்தைகளின் IQ அதிகமாக உள்ளது:
கொலஸ்ட்ரால் மற்றும் பிற கொழுப்புகள் தாய்ப்பாலில் குறைவாக உள்ளன. நரம்பு திசுக்களின் சிறந்த வளர்ச்சி உள்ளது. அத்தகைய குழந்தைகளின் IQ அளவு 2 முதல் 5 புள்ளிகள் அதிகமாக உள்ளது. இதன்மூலம் குழந்தைகளின் இதயம் நன்றாக வேலை செய்கிறது.
அதேநேரத்தில் தாயில் மார்பக புற்றுநோயின் ஆபத்து 28% க்கும் குறைவாக இருக்கும்.
தாய்ப்பால் கொடுப்பது தாயின் இதய நோய் அபாயத்தை 10% வரை குறைக்கிறது. அதேபோல, மார்பகப் புற்றுநோயின் அபாயம் 28% மற்றும் மூட்டுவலி அபாயம் 50% குறைகிறது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் 1 வருடத்தில் ஏற்படும் நன்மை:
பிறக்கும் போது: தாயின் முதல் பால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குடல் பாதுகாப்பை வழங்குகிறது.
6 வாரங்களுக்குப் பிறகு: ஆன்டிபாடிகள் உடலில் உருவாகும்.
3 மாதங்களுக்கு பிறகு: கலோரிகள் நிறைய அதிகரிக்கும்.
6 மாதங்களுக்குப் பிறகு: பாலில் ஒமேகா அமிலம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, குழந்தையின் மூளை வேகமாக வளர்கிறது.
12 மாதங்களுக்குப் பிறகு: அதிக கலோரிகள் மற்றும் ஒமேகா அமிலங்கள், இது தசை மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
ALSO READ ; பிரபலமாவதற்காக தந்தையின் சவப்பெட்டி முன் இளம்பெண் செய்த மோசமான செயல்: குவியும் கண்டனங்கள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment