உங்களுக்கு கொத்து கொத்தா தலைமுடி கொட்டுதா? இந்த ஒரே ஒரு உணவு பெருள் போதும்... இனி முடி கொட்டாதாம்?
- Get link
- X
- Other Apps
முடி உதிர்வு என்பது இன்று சாதாரண ஒன்றாக மாறி விட்டது. இதனால் பலரும் நவீன மருந்துக்களை நாடி ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர்.
செலவே இல்லாமல் முடி உதிர்வில் இருந்து தப்பிக்க உங்களுக்கு தயிர் உதவி புரியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தயிர் இது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல் நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்ட உணவாகும்.
இதில் புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துகள் கொண்டதாகவும் திகழ்கிறது.
அந்தவகையில் தயிரை தினமும் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகளில் ஒன்றுதான் முடிவளர்ச்சியை தூண்டுதல்.
ஒரு கிண்ணம் தயிர் வயிற்றில் இருந்து உங்கள் தலைமுடியின் அமைப்பை மேம்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
தயிரில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்கிறது, இது முடி வளர்ச்சிக்கு அவசியம்.
எனவே தினமும் அளவாக சாப்பிட்டு அதன் நன்மைகளை பெற்று கொள்ளுங்கள். சாப்பிடுவது மட்டும் இன்றி வெளிபுறத்தில் முடிக்கு பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- தயிர் - 2 தேக்கரண்டி
- தேன் - 1 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்
இந்த நான்கு பொருட்களையும் நன்றாக கலந்து தலைமுடிக்கு பூசுங்கள்.
பின்னர் அரைமணித்தியாலம் சென்று ஷாம்பூவுடன் தலைமுடியை அலசலாம்.
இப்படியே வாரம் ஒன்று அல்லது இரு முறை செய்தால் முடி உதிர்வது குறைந்து வளர்ச்சியில் நல்ல மாற்றம் ஏற்படும்.
ALSO READ : உடல் எடை அதிகரிப்பை தடுக்கும் எளிய அணுகுமுறைகள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment