6 மாதங்களாக வயிற்றில் பத்திரமாக இருந்த மொபைல்
- Get link
- X
- Other Apps
நமது வயிற்றுக்குள் செல்லும் அனைத்தும் உணவாகத் தான் இருக்க வேண்டுமா? என்ன? விநோதமான வயிற்றைக் கொண்ட மனிதரின் வயிற்று செய்தி வைரலாகிறது.
உலகில் பல அதிசயங்கள் நடப்பதை தினசரி நாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், இந்த செய்தி ஆச்சரியத்தை மட்டுமல்ல, திகைப்பையும் ஏற்படுத்துகிறது.
கல்லை உண்டாலும் செரிக்கும் வயிறு என்று தமிழகத்தில் சொல்வதை கேட்டிருக்கலாம். இந்த முதுமொழியை சற்றே காலத்திற்கு ஏற்றாபோல மாற்றிக் கொள்ளலாம் என்று இந்த சம்பவம் சொல்லாமல் சொல்கிறது.
வயிற்றில் ஆறு மாதங்களாக இருந்த மொபைல் போனைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆறு மாதங்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்தபோது இந்த மொபைல் போன் வெளியே எடுக்கப்பட்டு உலகம் எங்கிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் நடைபெற்ற வினோதமான சம்பவம் இது. போனை விழுங்கியது அந்த நபருக்குத் தெரியாதா என்ற கேள்வி எழுகிறதா? அவருக்கு நன்றாக தெரியுமாம்!!! தானாகவே வயிற்றில் இருந்து அது கழிவில் வெளியேறி விடும் என்று அவர் காத்துக் கொண்டிருந்தாராம்!
இந்த 6 மாத காத்திருப்புக்கு காரணமும் விந்தையானது தான்… போனை விழுங்கிவிட்டேன் என்று எப்படி மருத்துவரிடம் சொல்வது என்று சங்கடப்பட்டாராம் இந்த எகிப்து மனிதர்! இந்த செய்தி வெளியானதில் இருந்து வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது....
ஆனால், வயிற்றில் இருந்த போன் உணவை சரியாக இரைப்பைக்குள் செல்ல முடியாமல் தடுத்ததால், வேறு வழியில்லாமல் மருத்துவரை அணுகியிருக்கிறார்! ஆனால், எதற்காக மொபைல் போனை விழுங்கினார் என்பது இதுவரை தெரியவில்லை.
இறுதியாக, வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்ட பிறகுதான் மருத்துவரிடம் சென்றிருக்கிறார் இந்த மொபைல் மனிதர். மருத்துவர்கள் அவரது வயிற்றை எக்ஸ்ரே ஸ்கேன் செய்தபோது, அவருக்குள் முழு மொபைல் போன் இருப்பதைப் பார்த்தனர். அதிர்ச்சி அடைந், மருத்துவர்கள், உடனடியாக அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தனர். உயிருக்கு ஆபத்தான பல சிக்கல்கள் இந்த மொபைல் மேனுக்கு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.
அப்படியே முழு மொபைல் ஃபோனையும் விழுங்கிய ஒரு மனிதனை இதுவரை பார்த்ததில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இது பற்றி பேசிய அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஷ்ரப் மாபாத், ஆறு மாதங்களுக்கு முன்பு நோயாளி உட்கொண்ட மொபைல் போன் அவரது உடலுக்கு உணவு செல்வதை தடுத்ததாக தெரிவித்தார். இந்த ’மொபைல் விழுங்கி’ மனிதரின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் அவர் முழுமையாக குணமடைவார் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
ALSO READ : நீரில் பின்னிப்பிணைந்த பாம்புகள்: இது காதலா? கிரோதமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment