நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கம்ப்யூட்டரின் Mouse, மவுஸ் ஆனது எப்படி?

 உலகம் முழுவதும் பல விலங்குகள் மற்றும் பொருட்கள் இருந்தாலும், கணினியின் ஒரு பகுதிக்கு மவுஸ் என்று பெயரிடப்பட்டது ஏன்? சுவராசியமானத் தகவல்...


மிகவும் பொதுவான அல்லது நம்மைச் சுற்றியுள்ள சாதாரண விஷயங்களைப் பற்றி நாம் பெரும்பாலும் அறியாமல் இருப்போம். மிகவும் சுவாரஸ்யமான’மவுஸ்’ பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 கணினியில் வேலை செய்யும் அனைவருக்கும் மவுஸைப் பற்றித் தெரியும். கணினித் திரையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல அல்லது ஐகானைக் கிளிக் செய்ய, பயன்படுத்தும் இந்த சுட்டிக்கு எலியின் ஆங்கிலப் பெயர் வைக்கப்பட்டது ஏன்?  உலகம் முழுவதும் பல விலங்குகள் மற்றும் பொருட்கள் இருந்தாலும், கணினியின் ஒரு பகுதிக்கு மவுஸ் என்று பெயரிடப்பட்டது ஏன்? செல்லப்பிராணியாக வளர்க்கப்படாவிட்டாலும், பெரும்பாலான வீடுகளில் குடி கொண்டிருக்கும் எலிக்கும், கணினியின் மவுசுக்கும் இடையிலான தொடர்பு என்ன?

உண்மையில், மவுஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதற்கு பாயிண்டர் சாதனம் (Pointer Device) என்று பெயரிடப்பட்டது. இந்த  கணினியின் முக்கியமான சாதனத்தை 1960களில் டக்ளஸ் கார்ல் ஏங்கல்பார்ட் (Douglas Carl Engelbart) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 2 உலோக சக்கரங்கள் கொண்ட மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் மவுஸை கண்டுபிடித்தார் இவரே.  முதல் தலைமுறை கணினிகள் இயங்கிய காலத்தில் மவுஸ் இருந்தது இப்படித்தான்…


அப்போது ஒரு கணினியின் அளவு கிட்டத்தட்ட ஒரு அறைக்கு சமமாக இருந்தது என்பதும் சுவராசியமான செய்தி…மவுஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதை வடிவமைக்கும் போது, மவுஸ் ஒரு சிறிய சாதனமாக இருந்தது, அதைப் பார்க்கும்போது, எலி பதுங்கியிருப்பது போல் தோன்றும். மவுசை கணினியுடன் இணைக்கும் ஒயர், எலியின் வால் போல தோன்றுகிறது.

அதேபோல, எலி துரிதமாக செயல்படுவதுபோல, கணினியின் மவுசும் நமது வேலையின் வேகத்தை அதிகரிக்கிறது. இப்படி எல்லாம் யோசித்து தான் மவுஸ் என்று எலியின் ஆங்கிலப் பெயரை கணினியின் முக்கியமான பகுதிக்கு வைத்திருக்கிறார்கள்.

மவுஸ் என்று பெயர் வைப்பதற்கு முன், கணினியின் இந்தப் பகுதிக்கு வைக்கப்பட்ட பெயர் Turtle என்றும் சிலர் கூறுகின்றனர். அதற்கு காரணம் என்ன தெரியுமா? கணினியின் மவுஸின் மேற்பகுதி, ஆமையின் ஓட்டைப் போல கடினமாக இருப்பதுடன், அதன் தோற்றமும்  ஆமையுடன் பொருந்திப் போகிறது. ஆனால்,  ஆமை மந்தமாக செயல்படும் என்பதால், கணினியின் மவுசுக்கு ஆமை என்ற பொருள்படும் Turtle என்ற பெயர் மாற்றப்பட்டதாம்!!!

ஆமையாக இருந்து எலியாக மாறிய மவுஸ் என்னும் கணினியின் சாதனம் தற்போது புனையைக் கண்ட எலியாய் பதுங்கி வாலை சுருட்டிக் கொண்டுவிட்டது.. அதாவது, புதிய சகாப்தத்தில் கணினியின் மவுஸ், வால் இல்லாமல், வயர்லெஸ் மவுசாக மாறியது. 

நவீன தொழில்நுட்பம் விரவி பரவிவிட்ட இன்றைய காலகட்டத்தில் மவுஸ், தனது வாலை மட்டும் சுருட்டிக் கொள்ளவில்லை புளூடூத் வந்து, மவுஸை காணாமல் போகச் செய்துவிட்டது. காலம், எலியின் கூர்மையான பல்லை, புளூடூத்தின் தொழில்நுட்பம் மழுங்கச் செய்துவிட்டது. இது குறித்தும் நகைச்சுவையான விவாதங்கள் உலா வருகின்றன.


ALSO READ : விண்வெளியில் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் - நாசா கண்டுபிடித்தது


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்