உடல் எடையை குறைக்க உதவும் அவல் மோர்க்கூழ்
- Get link
- X
- Other Apps
காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
தேவையான பொருட்கள்:
அவல் - ஒரு கப்
சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2 (கீறவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
புளித்த தயிர் - ஒரு கப்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.
தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்).
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.
கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த்துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
சூப்பரான அவல் மோர்க்கூழ் ரெடி.
ALSO READ : மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment