நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இப்படியும் அதிர்ஷ்டம் தேடி வரலாம்! டிரைவருக்கு அடித்த 200 கோடி ஜாக்பாட்: எப்படி தெரியுமா?

 ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவாக வேலை செய்து வரும் நபர் ஒரே நாள் இரவில் மில்லியனராக மாறியுள்ளார்.

பாகிஸ்தான் வம்சாவளியான Junaid Rana, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நடந்த Mahzooz ஆன்லைன் குலுக்கலில் 50 மில்லியன் திர்ஹாம் பரிசை வென்றுள்ளார்.

Mahzooz ஆன்லைன் குலுக்கல் என்பது, குறித்த இணையத்தில் சென்றால், அதில் வாங்குபவர் ஒரு தனி அக்கவுண்ட் பதிவிட வேண்டும்.

அதன் பின் அங்கு அதிர்ஷ்ட எண்கள் என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நாம் விரும்பும் 6 எண்களை தேர்வு செய்துவிட வேண்டும். அதன் பின் நடத்தப்படும் குலுக்கலில் அதிர்ஷ்டசாலி அறிவிக்கப்படுவார்.


அந்த வகையில் இந்த வாரத்திற்கான அதிர்ஷ்டசாலியாக Junaid Rana மாறியுள்ளார். இவரின் மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் பாகிஸ்தானின் உள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் இதை கடைசி நேரத்தில் தான் வாங்கினேன்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கண்களை மூடிக் கொண்டு எண்களை தேர்வு செய்தேன். நான் எப்போதும் விலையுயர்ந்த பொருட்கள் மீது ஆசை கொண்டதில்லை.

இந்த குலுக்கலில் கூட நான் வென்றுவிட்டேன் என்று சொன்ன போது, எனக்கு மகிழ்ச்சி அவ்வளவு தானே தவிர வேறும் எதுவும் தோன்றவில்லை.

பாகிஸ்தானில் நாங்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். சனிக்கிழமை நான் வீட்டிற்கு போன் செய்த போது, என் சகோதரி போனை எடுத்தார். அப்போது நான் என் மனைவியிடம் போனை கொடுக்கும் படி கூறிய போது, அவர் தொழுகையில் இருப்பதாக கூறினார்.

உடனே நான் அவரிடம் நான் ஜாக்பாட் வெல்ல வேண்டும் என்று அவரை தொழுகை செய்ய சொல் என்று கூறினேன். ஒருவேளை மனைவியின் பிரார்த்தனையால் கூட இந்த அதிர்ஷ்டம் எனக்கு அடித்திருக்கலாம்.


எனக்கு மூன்றாவது குழந்தை பிறக்கவுள்ளது. எனக்கு லோன் வாங்கிய கடன் உள்ளது. அதே போன்று என் சகோதரனுக்கும் கடன் உள்ளது.

இந்த கடனை அடைத்துவிட்டு, பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஒரு வீட்டை வாங்க வேண்டும், அதே போன்று எனது கனவு காரான Nissan Skyline GTR வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

டிரைவராக வேலை வேலை செய்து வரும் Junaid Rana-வின் மாத சம்பளம் 6,000 திர்ஹாம் தானாம், தற்போது அவர் மில்லியனராக மாறியுள்ளதால், குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  



ALSO READ : பிரபலமாவதற்காக தந்தையின் சவப்பெட்டி முன் இளம்பெண் செய்த மோசமான செயல்: குவியும் கண்டனங்கள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்