நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நேக் சந்தின் பாறைப் பூங்கா

 அரியானாவின் தலைநகர் சண்டிகரில் அமைந்திருக்கிறது நேக் சந்த் பாறைப் பூங்கா. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் வீணாகத் தூக்கி எறியப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.


உடைந்த பீங்கான் கோப்பைகள், தட்டுகள், மின்சார உதிரி பாகங்கள், குழல் விளக்குகள், மிதி வண்டியின் பாகங்கள், பாட்டில்கள், பானைகள், குழாய்கள், கண்ணாடி வளையல்கள், மொசைக் கற்கள் என்று குப்பையில் எறியப்பட்ட பொருட்களைச் சேகரித்து, கலை நயத்துடன் உருவங்களை இங்கே படைத்திருக்கிறார்கள். இந்த அழகிய பாறைப் பூங்கா நேக் சந்த் சைனி என்ற தனி மனிதரால் உருவாக்கப்பட்டது என்பதை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது.




சுமார் 13 ஆண்டுகளாக தனி மனிதராக கோட்டைகள், நீர்வீழ்ச்சி, பஞ்சாப் கிராமத்தின் வளைந்து செல்லும் பாதைகள், அரண்மனை, மனிதர்கள், விலங்குகள் என்று உருவாக்கியிருந்தார். நேக் சந்தின் இந்தப் படைப்பாற்றலுக்குக் காரணம் என்ன தெரியுமா? அவரது அம்மா கூறிய ராஜா, ராணி கதைகள், தேவதைக் கதைகள், மந்திரவாதி கதைகள்தான். கதைகளைக் கேட்கும்போது அவற்றைக் காட்சிகளாகக் கற்பனை செய்துகொள்வார். இதனால் அவரது கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் பெருகின. இந்தப் பாறைப் பூங்காவை உருவாக்கவும் வைத்தன.



ALSO READ : அமேசான் அதிபரின் விண்வெளி நிலையம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!