நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இதய பராமரிப்பு… வாரத்திற்கு 4 நாள் முந்திரி சாப்பிட்டால் இவ்ளோ நன்மை!

முந்திரி பருப்பில் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் கே, பி6 மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
அனைத்து பருப்பு வகைகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான பல நன்மைகளை வழங்குகிறது. இதில் முந்திரி மிகவும் பிரபலமானது. பிரேசிலை பூர்வீகமாக கொண்ட முந்திரி பருப்புகள் பெரும்பாலும் இந்தியாவில் பணக்காரர்களின் சமையலில பயன்படுத்தப்படுகிறது. பனீர் மற்றும் ஆட்டு இறைச்சி முதல் கிரீமி சிக்கன் வரை. அனைத்து உணவிற்கும் முந்திரி அதன் தனித்துவமான சுவை மற்றும் மென்மையான அமைப்பை தருகிறது. இனிப்புகள், கிரீமி உணவுகள் மற்றும் சில சமயங்களில் ரொட்டிகளில் கூட முந்திரி பருப்புகள் சேந்து சாப்பிடும்போது வித்தியாமான சுவை கிடைக்கும்.

ஆனால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் மற்றும் இதய நோய் தாக்கம் அதிகரிக்கும் என்று வெளியான பல கட்டுக்கதைகள் காரணமாக மக்கள் தங்கள் தினசரி முந்திரியைத் தவிர்க்கிறார்கள். ஆனால் முந்திரி பருப்பில் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் கே, பி6 மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

முந்திரி பருப்பின் முதல் 5 ஆரோக்கிய நன்மைகள் :

மனித உடலில் கொட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு என இரண்டு வகை உள்ளது. இதில் நல்ல கொழுப்பு இதய நோய்களின் குறைந்த அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் கெட்ட கொழுப்பு நாள்பட்ட நிலைகளின் அபாயத்தை அதிகரிக்கும். முந்திரியில் ஆரோக்கியமான நிறைவுறாத கொழுப்புகள் நிறைந்துள்ளன, இதனால் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறைவு என ஆய்வின் மூலம நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில முந்திரி பருப்புகள் – உப்பு சேர்க்காத மற்றும் எண்ணெய் இல்லாதது இதய ஆரோக்கியத்திற்கான அதிகபட்ச நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் முந்திரி பருப்பை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து 37% குறைவாக இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

செம்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த முந்திரி பருப்புகள் உங்கள் சருமத்தை எப்போதும் பொலிவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வயதான அறிகுறிகளுடன் தொடர்புடையது மற்றும் இரத்த சோகை அபாயத்தை குறைகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இதழின் ஆய்வின்படி, முந்திரி பருப்பில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பசி வேதனையையும் குறைக்கிறது.

முந்திரி பருப்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது; எனவே, அவை குளுக்கோஸை மெதுவாகவும் பின்னர் இரத்த ஓட்டத்திலும் வெளியிடுகின்றன. இதனால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. இதனால் ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி அளவு உட்கொள்ளும் போது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

முந்திரி பருப்பில் உள்ள மெக்னீசியம் உள்ளடக்கம் நரம்பு மண்டலத்தின் சிறந்த செயல்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது என்றாலும், குறைந்த அளவில் முந்திரி பருப்பை அனுபவிப்பது உடல் வலி, ஒற்றைத் தலைவலியைத் தடுக்கலாம் மற்றும் நரம்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!