நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

1000 கி.மீ அப்பால் இருந்து உணவு ஆர்டர் செய்த நபர்... டெலிவரி பாய் செய்த செயலை பாருங்கள்

இந்த உணவை டெலிவரி செய்வதால் அவருக்கு கிடைப்பது வெறும் $9.25 (ரூ.694) மட்டுமே என்பது தான் மிகப் பெரிய வேதனை.
இன்றைய நவீன உலகில் ஏராளமான தொழிற்நுட்ப வளர்ச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் பல நமது அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத அளவிற்கு முக்கியமானதாக மாறிவிட்டது. அந்த வகையில் உணவு டெலிவரி செய்யப்படும் செயலிகளும், பெரிய அளவில் நம் வாழ்வில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக பெருநகரங்களில் காலை, மதியம், மாலை, இரவு என எல்லா வேளையிலும் உணவை ஆர்டர் செய்தே சாப்பிடும் பழக்கம் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இப்படி ஆர்டர் செய்கையில் சரியான நேரத்தில் வரவில்லை என்றால், அந்த டெலிவரி செய்யும் நபர் மீது மிக கடுமையான கோபத்தை தெரிவிக்கவும் செய்கிறோம். நகர் புறங்களில் உள்ள போக்குவரத்து நெரிச்சல் போன்றவற்றை நாம் கணக்கில் கொள்வதே இல்லை.

10-15 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஆர்டர் செய்த உணவு தாமதாக வந்தாலே இப்படி என்றால், 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து ஒருவர் ஆர்டர் செய்த உணவை அந்த டெலிவரி செய்யும் நபர் எப்படி கையாள்வார் என்பதை யோசித்து பாருங்கள். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் வசித்து வரும் கேலம் கிராண்ட் என்பவர் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார். வழக்கமாக டெலிவரி செய்து கொண்டிருந்த அவருக்கு 741.1 மைல்களுக்கு அப்பால் இருந்து உணவு டெலிவரிக்கான ரெக்வஸ்ட் வந்தது. அதாவது சுமார் 1192 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ரோட் ஐலேண்ட் என்கிற இடத்தில் இருந்து இந்த ஆர்டர் வந்துள்ளது.

10-15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆர்டரை டெலிவரி செய்யவே குறைந்தது 30 நிமிடங்கள் ஆகின்றபோது, இப்படி 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்துள்ள இந்த ஆர்டரை எப்படி இவர் டெலிவரி செய்ய போகிறார் என்பதே அவரின் குழப்பமும் கூட! அதிலும் இந்த உணவை டெலிவரி செய்வதால் அவருக்கு கிடைப்பது வெறும் $9.25 (ரூ.694) மட்டுமே.

இதை பற்றி தனது டிக்-டாக்கில் (@kaelumgrantt) வீடியோவாக இவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை சுமார் 4.5 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர், 1.5 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவில் ஆர்டர் செய்த நபரை குறிப்பிட்டு, "நீங்கள் ஆர்டர் செய்த உணவு பல கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து உங்களை வந்து சேர வேண்டும் என்பதால், நீங்களே உங்களுக்கான சாண்ட்விச்சை செய்து சாப்பிடுங்கள்; நீங்கள் ஆர்டர் செய்த உணவு எப்படி இருந்தாலும் உங்களுக்கு வந்து சேராது; யாராலும் கொண்டு வந்து சேர்க்க முடியாது" என கூறியுள்ளார்.

மேலும், "வெறும் $9.25 டாலருக்காக 1000 கிலோ மீட்டருக்கு மேல் சாகச பயணம் செய்து இந்த உணவை டெலிவரி செய்தாக வேண்டுமா?" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படிப்பட்ட வினோதமான உணவு டெலிவரி அனுபவத்தை கேலம் தனது டிக்-டாக்கில் பகிர்ந்தததும், பல்வேறு வகையான கமெண்ட்ஸ் வர தொடங்கியது.

அதில் சில கமெண்ட்கள், "ஆர்டர் செய்யும்போது அந்த வாடிக்கையாளர் நிச்சயம் போதையில் தான் இருந்திருக்க வேண்டும்; ஆர்டர் செய்த நபர் தனது வி.பி.என்-ஐ மாற்ற மறந்து விட்டார் போல அல்லது அவர் சுற்றுலாவுக்காக ஓஹியோ வந்திருப்பதால் தவறுதலாக அந்த டெலிவரி அட்ரஸ் கொடுத்து விட்டார் போல" என்று கிண்டலுடன் சேர்த்து கமெண்ட் செய்துள்ளார்கள்.

எதுவாக இருந்தாலும் இப்படிப்பட்ட வீடியோ நெட்டிசன்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக தான் இருக்க போகிறது!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!