வியட்நாமில் கொரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் பரவியதால் பள்ளிகளுக்கு காலவரையறையின்றி விடுமுறை விடப்பட்டிருந்தது.
சார்ஜிங்கில் இருந்த செல்போன் வெடித்ததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமில் Nghe An மாகாணத்தில் வசித்து வந்த 5ம் வகுப்பு மாணவன் ஒருவர், செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளார். ஸ்மார்ட்போனில் சார்ஜ் மிகவும் குறைவாக இருந்ததால், அவர் செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு, ஆன்லைன் வகுப்பிலும் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஸ்மார்ட்போன் ஹீட்டாகி, திடீரென வெடித்துச் சிதறியது. ஹெட்போன் போட்டு வகுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பேட்டரி வெடித்து சிதறியதில், சிறுவன் அணிந்திருந்த உடைகள் தீப்பிடித்தன.
மளமளவென சிறுவனின் உடல் முழுவதும் தீ பரவியது. படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர், அருகில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனில்லாமல் சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் வெளியாகும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த சம்பவம் அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளன.
வியட்நாமில் கொரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் பரவியதால் பள்ளிகளுக்கு காலவரையறையின்றி விடுமுறை விடப்பட்டிருந்தது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், பொதுவாக சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன. அதில், குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படத் தொடங்கியது. பள்ளி செல்லும் மாணவர்களிடையே பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால், மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகளை தொடருமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால், Nghe An மாகாணத்தில் வசித்து வந்த சிறுவனும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும்போது, எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. இது குறித்து நிபுணர்கள் பேசும்போது, தொற்றுநோய் பரவலுக்குப் பின்பு செல்போன் மற்றும் டேப்லெட், கம்யூட்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள், முன்னெச்சரிக்கை தகவல்கள் முறையாக யூசர்களுக்கு கொண்டு சேர்க்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர்கள், மின்சாதனங்களின் பயன்பாடு குறித்து அரசு மற்றும் நிறுவனங்கள் முறையான வழிமுறைகளை யூசர்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
ஆன்லைன் அபார வளர்ச்சியை பெற்றுள்ளதால், அதன்வழியாகவே முறையான விழிப்புணர்வு தகவல்களை பரப்பினால்கூட இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சார்ஜ் குறைவாக இருக்கும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது, போதுமான சார்ஜ் இருந்தால் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் என பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
குறைவான சார்ஜ் இருக்கும்போது செல்போன்களை பயன்படுத்தினால், அதன் ரேடியேசன் உடலுக்கு கூடுதலான பாதிப்பை கொடுக்கும். சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போன் பயன்படுத்தினால் அதிக வோல்ட்டில் மின்சாரம் வந்தால் அல்லது வேறு ஏதேனும் கோளாறுகள் நடைபெற்றால், விபரீதமான விபத்துகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதை ஸ்மார்ட்போன் யூஸ் பண்ணும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சிறிது கவனக்குறைவு, உயிரைக்கூட பறித்துவிடும்.
Comments
Post a Comment