பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களை வியக்க வைக்கும்
- Get link
- X
- Other Apps
நடை பயிற்சியில், பின்னோக்கி நடப்பது வியக்கத்தக்க நன்மைகள் வழங்குகிறது என்ரு கூறினால், உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நடைபயிற்சி அல்லது ஜாகிங் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் தினமும் ஒரே பயிற்சியை செய்வதால், மனம் சலிப்படையத் தொடங்குவது மனித இயல்பு. அதனால்தான் இந்த கட்டுரையில் பின்னோக்கி நடப்பதன் நன்மைகள் கூறப்பட்டுள்ளன. பின்னோக்கி நடக்கு பயிற்சியை மேற்கொள்ளும் போது, தினமும் ஒரே மாதிரியான நடைபயிற்சி அல்லது ஜாகிங் செய்வதால் ஏற்படும் , சலிப்பும் நீங்குவதோடு, கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகளும் அடங்கியுள்ளது.
பின்நோக்கி நடப்பதன் ஆரோக்கிய நன்மைகள் (Retro Walking Benefits )
பின்னோக்கி நடப்பது அல்லது ரெட்ரோ வாக்கிங் கால் தசைகளை வலுப்படுத்தவும், உடல் சமநிலையை அதிகரிக்கவும், உடல் நிலைத்தன்மையை அதிகரிக்கவும், விளையாட்டு செயல்திறனை மேம்படுத்தவும் மிகவும் உதவும். பின்னோக்கி நடைபயிற்சி (Walking Backward) அல்லது ஜாகிங் (Jogging Backward) செய்வதன் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
நம் முழங்கால்கள் நிறைய வேலை செய்கின்றன, தினமும் நடக்கும் போது முழங்காலுக்கு அழுத்தம் ஏற்படுகின்றன. பின்னோக்கி நடப்பது முழங்கால்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. இது முழங்கால் எலும்புகளை தாங்கும் தசைகள் வார்ம் அப் ஆக வைக்கிறது.
சாதாரணமாக நடக்கும்போது, உங்கள் தொடை, முழங்கால், கணுக்கால் எலும்புகள் மற்றும் தசைகள் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன. ஆனால் நீங்கள் பின்னோக்கி நடக்கும்போது, பெரும்பாலும் இயங்காத தசைகளின் பகுதிகள் முக்கியமாக செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பாதத்தின்
அனைத்து தசைகளையும் முற்றிலும் வலிமையாக்க உதவுகிறது
பின்னோக்கி நடப்பதன் நன்மைகள் (Benefits of Walking Backward) பற்றி முக்கியமாக கூற வேண்டும் என்றால், உடலின் நெகிழ்வுத்தன்மையையும் நிலைத்தன்மையையும் அதிகரிக்கும்.
பின்னோக்கி ஜாகிங் செய்வதன் மூலம், நீங்கள் சாதாரண நடைப்பயிற்சியை விட அதிக கலோரிகளை எரிக்கிறீர்கள், இது எடை இழப்பிற்கும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க நீங்கள் உடற்பயிற்சி செய்து வருகிறீர்கள் என்றால், இந்த பின்னோக்கிய நடை பயிற்சி பெரிதும் உதவும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ : உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment