நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்டர்நெட் வசதி இல்லாமல் WhatsApp பயன்படுத்துவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

WhatsApp பயன்படுத்தாதவர்களே தற்போது இல்லை என கூறும் அளவிற்கு அனைவரும் WhatsApp பயனராக உள்ளனர். இந்நிலையில் இன்டர்நெட் வசதி இல்லாமல் WhatsApp பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.



Chatsim:

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் மக்களும் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து வருகின்றனர். ஒரு நாள் முழுவதும் மொபைல் போன் மற்றும் மொபைல் போன் இல்லாமல் வாழ்வது பெரிய சாதனையாக கருதப்பட்டு வருகிறது. உணவு இல்லாமல் கூட இருக்க முடியும் மொபைல் போனும் இன்டர்நெட்டும் இல்லாமல் இருப்பது முடியாத ஒன்று என பலரும் கருதி வருகின்றனர். அந்த அளவிற்கு இணையத்தில் மனிதர்கள் மூழ்கியுள்ளனர்.

இணையம் மூலம் நமக்கு தேவையான அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு இணையதளம் மற்றும் மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும் WhatsApp பயனராகவே இருப்பார்கள். உலகம் முழுவதும் தனக்கென பயனர்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வரும் நிறுவனம் WhatsApp. இந்த நிறுவனம் தங்களது பயனர்களுக்கென அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. தகவல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் WhatsApp நிறுவனம் போன் பேசும் வசதி, வீடியோ கால் வசதி, பண பரிமாற்றம் செய்யும் வசதி முதலியனவற்றை வழங்கி வருகிறது.

WhatsApp பயன்படுத்துவதற்கு இன்டர்நெட் கட்டாயமாக இருந்து வந்த நிலையில் தற்போது இன்டர்நெட் வசதி இல்லாமலும் WhatsApp பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதற்கு பயனர்கள் ஒரு சிறப்பு சிம் கார்டை வாங்க வேண்டும். Chat Sim எனப்படும் இந்த சிறப்பு சிம் கார்டை இ-காமர்ஸ் இணையதளம் அல்லது ChatSim இன் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் வாங்க முடியும். தற்போது ChatSim ஆனது 1,800ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1,800 ரூபாய்க்கு வாங்கிய இந்த சிம்மை ஒரு வருடத்திற்கு பயன்படுத்த முடியும். அதன் பின் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த சிம் கார்டை அனைத்து மொபைல் போனிலும் பயன்படுத்த முடியும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து எல்லா இடங்களிலும் வேலை செய்கிறது. இந்த சிம் கார்டை பயன்படுத்துவதன் மூலம் இன்டர்நெட் இல்லாமல் WhatsApp பயன்படுத்த முடியும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்