நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ராட்சத ராட்டினத்தின் உச்சியில் தேநீர் அருந்திய துபாய் இளவரசர்! பார்வையாளர்களை வியக்க வைத்த காட்சி

 துபாய் இளவரசர் ஷேக் ஹமாத் ராட்சத ராட்டினத்தில் உச்சியில் இருந்து தேநீர் அருந்தும் வீடியோ காட்சியானது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

துபாய் நாட்டில் பல்வேறு சுற்றுலா தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், திறக்கப்பட்டுள்ள சூப்பரான சுற்றுலா தளமான ஐன் துபாய் சுற்றுலா தளம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஐன் துபாய் உலகிலேயே மிக உயரமான ராட்சத ராட்டினமான இது, நிலப்பரப்பில் இருந்து சுமார் 870 அடியில் இருந்தும், 250 மீட்டர் உயர வரை கட்டப்பட்டுள்ளது. இந்த ராட்டினத்தில் இருந்தே துபாயை கண்டு களிக்க முடியுமாம்.

இந்த ராட்சத ராட்டினத்தில் மட்டும் 48 கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடம் ப்ளு வாட்டர் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. ராட்டினத்தில் செல்ல ஆசைப்படும் மக்கள் 1 மணிநேரத்திற்கு முன்பாகவே இங்கு வந்துவிட வேண்டுமாம்.

மேலும், இந்த இடத்தை ஒரு முறை சுற்றி பார்க்க 38 நிமிடம் ஆகுமாம். இந்நிலையில், இந்த ராட்சத ராட்டினத்தில் பயணம் செய்த துபாய் இளவரசர் ஷேக் ஹமாத் ராட்டினம் உச்சத்தில் இருந்து தேநீர் அருந்துவதுபோல் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!