நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பழைய சோறு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடத்தில் உள்ளது.

பழைய சோறில் வேறெந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன

பழைய சோறில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால் இதை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

பழைய சோறில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகளவில் இருப்பதால், உடலை பாதுகாப்பதோடு, உடலை தாக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்தும் காப்பாற்ற வகை செய்கிறது.
தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதன் மூலம், முதுமையை தடுக்கலாம். நீண்ட நாட்கள் இளமையாக காட்சியளிக்க விரும்புவர்கள் தங்கள் காலை உணவுப்பட்டியலில் பழைய சோரை சேர்த்து கொள்ளலாம்

தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடுவதோடு, சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

பழைய சோறு ,நாலு சின்னவெங்காயம் ,பச்சை மிளகாய் ,அதிலும் கொஞ்சம் மோர் ஊத்தி அதை சாப்பிடுவதே தனி சுகம் தான்,

பழைய சோறு செய்யறது ஒன்னும் கஷ்டமான வேலை இல்லை, பழைய சோறுக்கு பார்முலா எல்லாம் கிடையாது ராத்திரி வடிச்ச சாதத்தில ரெண்டு சோம்பு தண்ணி ஊத்தி வச்சி காலைல எடுத்து பாத்தா பழைய சோறு ரெடி!!



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்