நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாட்ஸ்அப் வரலாற்றை இனி ஐபோனிலிருந்து எந்த ஃபோனுக்கும் மாற்றலாம்!

 பரிமாற்றத்தின் போது, ஐபோன் புதிய செய்திகளைப் பெறாது என்பதை கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.

  • ஆண்ட்ராய்டு 12 பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட் வரலாற்றை ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு பாதுகாப்பாக மாற்றலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது. அதாவது அனைத்து கூகுள் பிக்சல் பயனர்களும் இந்த அம்சத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் போன் பயனர்களுக்கு மட்டுமே முன்பு இது கிடைத்தது.
  • “புதிய திறன்களை உருவாக்க வாட்ஸ்அப் குழுவுடன் நாங்கள் பணியாற்றியுள்ளோம். இவை அனைத்தும் iPhone-லிருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்கும் உங்கள் வாட்ஸ்அப் வரலாற்றை எந்தத் தடையுமின்றி மாற்றுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூகுள் கூறியது.
  • ஆண்ட்ராய்டு 12 உடன் தொடங்கும் எந்த ஃபோனும் பரிமாற்றக் கருவியைப் பயன்படுத்த முடியும் என்று கூகுள் வலியுறுத்தியுள்ளது. வரவிருக்கும் மாதங்களில் இந்த அம்சம் சாம்சங் மற்றும் கூகுள் சாதனங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது என்பதையும் இது குறிக்கிறது.
  • ஆண்ட்ராய்டு சாட், iOS -லிருந்து ஆண்ட்ராய்டுக்கு மாற்றுவது எப்படி?

  • கூகுள் பிக்சல் பயனர்களுக்கு லைட்னிங் டு யுஎஸ்பி-சி கேபிள் தேவை. இதைப் பயன்படுத்தி ஒருவர் தங்கள் பிக்சலை ஐபோனுடன் இணைக்க வேண்டும். Pixel-ன் ஆரம்ப அமைவின் போது இந்த ஆப்ஷனை கேட்கப்படுவீர்கள், அதன் பிறகு வாட்ஸ்அப்பை தொடங்க உங்கள் ஐபோனில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து உங்கள் சாட், மீடியா மற்றும் பிற விஷயங்களை உங்கள் பிக்சல் ஃபோனுக்கு மாற்றவும்.
  • இந்த சாதனங்களுக்கு இடையில் டேட்டா பாதுகாப்பாக மாற்றப்படுவதாகவும், பயனர்கள் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. பரிமாற்றத்தின் போது, ஐபோன் புதிய செய்திகளைப் பெறாது என்பதை கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.
  • “பரிமாற்ற செயல்முறை முழுவதும் உங்கள் டேட்டா பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய எங்கள் குழு வாட்ஸ்அப்புடன் கைகோர்த்துச் செயல்பட்டது. எனவே, உங்கள் வாட்ஸ்அப் தகவல் மற்றும் ஃபைல்களை வேறு யாரும் அணுக முடியாது. உங்கள் வாட்ஸ்அப் சாட் வரலாறு உங்கள் ஐபோனிலிருந்து உங்கள் புதிய ஆண்டிராய்டு மொபைலுக்கு நகலெடுக்கப்படும். மேலும், பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கும் போது பழைய சாதனத்தில் புதிய செய்திகள் வராமல் இருப்பதை நாங்கள் தானாகவே உறுதி செய்வோம்” என்று கூகுள் ஒரு வலைப்பதிவு போஸ்டில் தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்