நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மூக்கின் மேற்பகுதியில் உள்ள பிளாக் ஹெட்ஸை நீக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

 முகத்தின் அழகிற்கு மூக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மூக்கினை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள்.



இதனால் முகத்தில் தேவையற்ற அழுக்குகள் படிந்து கரும்புள்ளிகள் ஏற்பட்டு அசிங்கமாவிடும். இது முகத்தின் மொத்த அழகையும் கெடுத்துவிடும்.

 எனவே இதுபோன்ற பிரச்சினையிலிருந்து தப்பிக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளியமுறையில் சரி செய்யலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.  



தேவையான பொருள்கள்

  •  வெந்நீர் 
  • மென்மையான துண்டு பிரஷ் 
  •  லெமன்
  •  தூய்மை செய்யும் சிறுகத்தி
  •  உப்பு 

  செய்முறை 

  •  மென்மையான துண்டை எடுத்து வைத்திருக்கிறோமே அந்த துண்டை எடுத்து வெந்நீரில் நன்கு நினைத்து அதை அப்படியே வெதுவெதுப்புடன் முகத்தின் மேல் போட்டு மூடிக் கொள்ள வேண்டும்.

  •  இது நம்முடைய சருமத் துவாரங்க்ள திறப்பதற்கு உதவி செய்யும். இது நாம் ஸ்கிரப் பயன்படுத்தி வெகுநேரம் தேய்த்த பின் கிடைக்கும் பலனை மிக வேகமாகவே நமக்குக் கொடுக்கும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இப்படி வைத்திருந்தால் போதும்.

  •  ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அந்த இரண்டு துண்டுகளில் இருந்தும் சிறிதளவு எலுமிச்சை சாறினை பிழிந்து விட்டு, அப்படியே அந்த எலுமிச்சை துண்டுகளின் மீது உப்பினை எடுத்து தூவி விடுங்கள்.  

  •  இப்படி உப்பு தூவப்பட்ட எலுமிச்சை துண்டுகளை முகம் முழுவதும் குறிப்பாக, வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் இருக்கிற பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொஞ்சம் அதிகமாகவும் அக்கறை கொண்டு நன்கு வட்ட வடிவில் தேயுங்கள்.   

  •  நன்கு ஸ்கிரப் செய்த பின் காட்டனில் வெதுவெதுப்பான தண்ணீரால் தொட்டு துடைத்துவிட்டு, சுத்தம் செய்யும் கருவி கொண்டு முகம் மற்றும் மூக்குக்கு மேல் உள்ள வெண்புள்ளிகளை வெளியே எடுங்கள். வலி இல்லாமல் ஈஸியாக வெளியேறும்.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்