நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Beauty Tips: மருக்களை நீக்க எளிய இயற்கையான வழிமுறை

 மருக்களால் பிரச்சனையா? சில சுலபமான வீட்டு வைத்திய முறைகளை கடைபிடித்து பயனடையலாம். பலன் சற்று மெதுவாக கிடைத்தாலும், தீர்வு நிரந்தரமானதாக இருக்கும்.

முகத்தில் மருக்கள் தோன்றுவதால் முகப்பொலிவு குறைவதாக கவலை ஏற்படுவது இயல்பான பிரச்சனையாகிவிட்டது. பலருக்கு முகம், கழுத்து அல்லது காதுகளுக்குப் பின்னால் மருக்கள் இருக்கும். மாசு மருவற்ற முகம் வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கிறது. உங்களுக்கும் மருக்கள் பிரச்சனையாக இருக்கிறதா?

மருக்களை தவிர்க்கும் சில சுலபமான வீட்டு வைத்திய முறைகளை கடைபிடித்து பயனடையலாம். பலன் சற்று மெதுவாக கிடைத்தாலும், தீர்வு நிரந்தரமானதாக இருக்கும்.
ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வருவது நல்ல பலன் கிடைக்கும். அல்லது இஞ்சியை தோல் சீவி பேஸ்ட் போல் அரைத்து மரு உள்ள இடத்தில் தடவி வரலாம். தொடர்ந்து 2 வாரங்களுக்கு இப்படி செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.


அன்னாசிப் பழச்சாறு எடுத்து, அதனை மரு உள்ள இடத்தில் தேய்த்து 25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதேபோல, வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்து வரும் வழக்கத்தைப் பின்பற்றினாலும் மருக்கள் மாயமாய் காணமல் போகும்.

இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுவதும் பயனளிக்கும். மருக்களின் மீது கற்பூர எண்ணெய் தடவி வந்தால், காற்றில் கரையும் கற்பூரம் போல, மருக்களும் மாயமாகிவிடும்…

கற்றாழையின் உட்புற சதையை எடுத்து, அதனுடன் சம அளவு எலுமிச்சை சாறை கலந்து, இந்தக் கலவையை மரு மீது படும்படு நன்றாக மசாஜ் செய்யவும். அதன்பிறகு, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தாலும் மரு வலுவிழந்து விழுந்துவிடும். 

ஆப்பிள் சீடர் வினிகரும், மருவுக்கு மருந்தாக செயல்படும். மரு உள்ள இடத்தில், ஆப்பிள் சீடர் விந்னிகரை காட்டனில் நனைத்து தேய்த்து வந்தால், மரு, உங்கள் முகத்தை மறந்துவிடும்.பூண்டை இடித்து, அதை சாறு எடுத்துக் கொண்டு, அதனை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி, காற்றுப் புகாமல் இருக்க ஒரு துணியால் முடி வைத்து, சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி வந்தால், மருக்கள் நீங்கும்.   தினசரி மூன்று முறை இதை தொடர்ந்து செய்துவந்தால் பலன் விரைவில் தெரியும்.

 அகத்தி கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தொடர்ந்து தடவிவந்தால் மரு உதிர்ந்து விடும். ஆளி விதையை அரைத்து, அதனுடன் சுத்தமான தேன் சிறிதளவு சேர்த்து இந்தக் கலவையை மருவின் மீது தடவி, காற்றுப் படமால் அரை மணி நேரம் வைக்கவும். இதை தொடர்ந்து செய்துவந்தாலும், மருக்கள் மறைந்துபோகும்.


ALSO READ : வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!